பிரபல தொகுப்பாளினி அர்ச்சனாவின் தங்கை, தனது தாய் இறப்பதற்கு முன்பு அவருடன் கடைசியாக எடுத்துக்கொண்ட வீடியோவை பகிர்ந்திருக்கிறார். 90 ஸ்களில் தமிழில் தனியார் சேட்டிலைட் சேனல்கள் அறிமுகமான காலத்தில் இருந்தே ஆங்கரிங் செய்து வருகிறார் அர்ச்சனா. சன் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிபரப்பான காமெடி டைம் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வந்தார் அர்ச்சனா. அந்த நிகழ்ச்சியில் பிரபல காமெடி நடிகர் சிட்டிபாபு உடன் இணைந்து தனது தொகுப்பாளர் பணியை தொடர்ந்தார்.
அதன் பின்னர் ஸ்வர்ணமால்யா விட்டுச்சென்ற ‘இளமை புதுமை’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. மேலும், அர்ச்சனாவின் ஆங்கரிங் ஸ்டைலுக்கு பல்வேறு ரசிகர்களும் உருவாக்கினார்கள். பின்னர் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரிகம ‘ ரியாலிட்டி ஷோவில் தொகுப்பாளினியாக களமிறங்கினார் அர்ச்சனா.
விஜே அர்ச்சனா:
தற்போது வரை அர்ச்சனா, ஜீ தமிழில் முன்னணி தொகுப்பாளினியாக திகழ்ந்து வருகிறார். இதற்கு இடையே விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக அர்ச்சனா கலந்து கொண்டார். தொடக்கத்தில் ரசிகர்கள் மத்தியிலும், போட்டியாளர்கள் மத்தியிலும் அன்பு அன்னையாக மாறி இருந்த இவர், கொஞ்ச நாட்களிலே கடுமையாக விமர்சிக்கப்பட்டார். அந்த நிகழ்ச்சியில் இவர் அறந்தாங்கி நிஷாவுடன் சேர்ந்து ‘அன்பு தான் ஜெயிக்கும்’ கேம் ரசிகர்கள் இடையே பெரும் விவாதத்தை கிளப்பியிருந்தது.
யூடியூப் சேனல்:
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் அர்ச்சனா, தனது மகள் மற்றும் தங்கை அனிதாவுடன் இணைந்து யூடியூபில் வீடியோக்களை பதிவிட்டு வந்தார். அவற்றில் சில நெட்டிசன்களின் கவனம் ஈர்க்க, வழக்கம்போல் ட்ரோல் செய்து வைரலாக்க தொடங்கினர். அதிலும் குறிப்பாக ‘பாத்ரூம் டூர்’ வீடியோ படு பயங்கரமாய் கலாய்க்கப்பட்டது. தற்போது பிக் பாஸ் பிரபலமாய் தமிழகமெங்கும் அறியப்படும் அர்ச்சனா தனது கேரியரில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
அர்ச்சனாவின் தாய் மறைவு:
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் தொகுப்பாளினி அர்ச்சனா தனது தாய் உயிர் இழந்ததாக பதிவிட்டிருந்த நிலையில், அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்கள் மட்டுமில்லாமல் பிரபலங்கள் பலரும் ஆறுதல் கூறியிருந்தார்கள். தற்போது அர்ச்சனாவின் தங்கை அனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்கள் அம்மாவுடன் எடுத்துக்கொண்ட கடைசி வீடியோவை பகிர்ந்திருக்கிறார். தற்போது அந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அம்மாவின் கடைசி வீடியோ:
அந்த வீடியோவை மருத்துவமனைக்கு செல்வதற்கு முன் கடைசியாக எடுத்துள்ளனர். மேலும் அதில், அம்மாவுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப் போகிறோம். எல்லாம் நன்மைக்கே என்று அர்ச்சனா கூறியிருக்கிறார்.விரைவில் குணமடைந்து வீடு திரும்புவேன் என்று அர்ச்சனாவின் தாய் கூறி இருக்கிறார். தற்போது அந்த வீடியோவை பகிர்ந்து, நீங்கள் திரும்ப வருவேன் என்று சத்தியம் செய்தீர்கள். நாங்களும் உங்களுக்கு சத்தியம் செய்தோம். இப்போ என்ன பண்றதுனே தெரியல என்று அர்ச்சனாவின் தங்கை அனிதா உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார்.