தன்னை சூப்பர் ஸ்டார் என்று சொன்ன Vj – லைவில் சூர்யா சொன்ன பதில். பாராட்டும் ரசிகர்கள். வீடியோ இதோ.

0
5484
surya
- Advertisement -

சூப்பர் ஸ்டார் என்றால் எப்போதும் அவர் ஒருத்தர் தான் என்று சூர்யா கூறிய பதிலடி தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று வருகிறது. அதிலும் இவருடைய பல படங்கள் அறிவியல் சார்ந்த படங்களாகவும், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் படங்களாகவும் இருக்கும். மேலும், சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பாக பல படங்களை தயாரித்து வெளியிட்டு உள்ளார்கள்.

-விளம்பரம்-

தற்போது சூர்யா அவர்கள் ஜெய் பீம் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை ஞானவேல் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளார்கள். பழங்குடியின பெண்ணின் பிரச்சனைக்காக போராடும் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சூர்யா இந்தப் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க உண்மை சம்பவத்தை மையமாக வைத்த கதை. இந்த படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 2 ஆம் பண்டிகையை அமேசான் பிரைம்மில் வெளியாக உள்ளது.

- Advertisement -

இதையும் பாருங்க : வைரலான குறும்படம் பிரியங்காவை வச்சி செய்யும் கமல் – இப்போ சந்தோசமா உங்களுக்கு எல்லாம்.

சமீபத்தில் சூர்யாவின் ஜெய் பீம் படத்தின் ட்ரைலர் சோஷியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஜெய் பீம் படம் ட்ரைலர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தின் ட்ரெய்லரை விட அதிக பார்வையாளர்களை கடந்தது. இதனால் ரஜினிகாந்த் ரசிகர்கள் எல்லாம் சூர்யா மீது பயங்கர கடுப்பில் இருந்தார்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் ஜெய் பீம் படத்தின் டிரைலர் வெளியீட்டு குறித்து சூர்யா அவர்கள் தற்போது பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் தொகுப்பாளினி ஒருவர் ‘சூப்பர் ஸ்டார் சூர்யா’ என்று குறிப்பிட்டார். இதற்கு சூர்யா அவர்கள் கூறியது, எனக்கு இன்னும் ஒரு விஷயம் உறுத்திக் கொண்டிருக்கிறது.

-விளம்பரம்-

சூப்பர் ஸ்டார் என்றால் எங்களுக்கு எப்போதுமே அவர் தான். ரஜினி சார் ஒருவர் மட்டும் தான் எங்களுக்கு சூப்பர் ஸ்டார் என்று கூறியிருந்தார். இப்படி இவர் கூறிய வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரஜினி ரசிகர்கள் சூர்யாவிற்கு நன்றி தெரிவித்தும், ஜெய்பீம் படத்துக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும், ஜெய்பீம் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக எதிர்நோக்கி கொண்டிருக்கின்றனர். ஜெய்பீம் படத்தை தொடர்ந்து சூர்யா அவர்கள் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement