ரக்சன் விஜய் டிவிக்கு வருவதற்கு முன் என்ன வேலை செய்தார் தெரியுமா !

0
2174

விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் கலக்க போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் ரக்சன். இவருடன் சேர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஜாக்குலினுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால், இந்த இடத்திற்கு வர ரக்சன் எவ்வளவு கஷ்டங்களை சந்தித்து உள்ளார் தெரியுமா?
ரக்சன் 1991ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி பிறந்தவர். இவருடைய சிறு வயதிலேயே தந்தை இறந்துவிட்டார். அப்போது சற்று தள்ளாடிய அந்த குடும்பத்தை, அவரது அம்மா தான் காப்பற்றினார். ரக்சனை பொறுப்புடன் படிக்க வளர்த்து வளர்த்தார் அவரது அம்மா.

பள்ளிப்படிப்பை முடித்தவுடன் சினிமாவில் ஆர்வமாக இருந்த ரக்சன், விசுவல் கம்யூனிகேஷன் எடுத்து படித்துள்ளார். எல்லோரும் அதையே படித்தால் எப்படி வேலை கிடைக்கும். அதே போல ரக்சனுக்கும் கிடைக்கவில்லை.

இதனால், படிப்போய் முடிந்த பின் கிடைத்த வேலை எல்லாம் செய்துள்ளார் ரக்சன். துணி கடையில் வேலை செய்வது, தண்ணீர் கேன் போடுவது என அனைத்து வேலைகளையும் செய்துள்ளார்.
இதற்கு இடையில் அவ்வப்போது சினிமா வாய்ப்புகளையும் தேடி அலைந்த ரக்சனுக்கு என் காதல் தேவதை என்ற படத்தில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அந்த படம் படு ப்ளாப் ஆனது.

பின்னர், ராஜ் டீவியில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி சிறிது காலம் வீ.ஜே வாக வேலை செய்தார். அதில் தனது திறமையை காட்ட இசையருவி சேனனில் குத்துப்பாட்டு என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இதிலும் தனது திறமையை காட்ட, கலைஞர் டீவியில் வரும் நடிகர் நடிகைகளை இன்டர்வியூ எடுக்கும் அளவிற்கு உயர்ந்தார். இந்த நிலையில் கலக்கப் போவது யாரு சீசன் 5வில் புதிய தொகுப்பாளர்களை நியமிக்க விஜய் டீவி முடிவெடுத்தது, அங்கு சென்று ஆடிசனில் கலந்து கொண்டு ஒரு வழியாக செலக்ட் ஆகி, தற்போது அடுத்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார் ரக்சன்.