விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அழகே அழகு சீரியலில் பாக்கியராஜ் ஃபோனில் தங்கராஜ் வைத்த மெசேஜ் எல்லாம் கேட்டார். ரேவதிக்கு ஏதாவது பிரச்சனை இருக்குமோ? என்று பயப்பட்டார். பின் யாருக்கும் தெரியாமல் பாக்யராஜ் கிளம்பி ரேவதி வீட்டிற்கு போனார். அங்கு வாசலில் ரேவதி உட்கார்ந்திருப்பதை பார்த்து பாக்கியராஜ் பதறிப் போனார். என்ன நடந்தது? என்று பாக்கியராஜ் விசாரித்தார். ரேவதி எதுவும் பேசாமல் அழுதார். அந்த சமயம் பார்த்து தங்கராஜ் வெளியே வந்து ரொம்ப திமிராக பேசி இருந்தார். பாக்யராஜ், ரேவதிக்காக சப்போர்ட் செய்து பேசி இருந்தார். தங்கராஜ், என்னை மீறி உன் அண்ணனுடன் சென்று விடுவாயா? என்றார். ரேவதி என்ன செய்வது என்று புரியாமல் தவித்தார்.

தங்கராஜ், ரேவதியை உள்ளே போ என்றார். பாக்கியராஜ், எதுவாக இருந்தாலும் காலையில் பேசிக்கொள்ளலாம். நீ என்னுடன் வீட்டிற்கு வா என்று ரேவதி கையை பிடித்து இழுத்தார். ரேவதி, நீ வீட்டிற்கு கிளம்பு. நான் பார்த்துக் கொள்கிறேன். நீ கவலைப்படாதே என்று தன்னுடைய அண்ணனை அனுப்பி வைத்து வீட்டுக்குள் போனார். தங்கராஜ் மீண்டும் ரேவதியிடம் வம்பு இழுத்தார். ரேவதி, தங்கராஜ் இடம் சண்டை போட்டுவிட்டு ரூமுக்குள் சென்று விட்டார். பின் வீட்டிற்கு வந்த பாக்கியராஜ், மலரிடம் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். அதோடு கடன் கொடுத்தவர் தன்னுடைய வண்டியை எடுத்துக் கொண்டு போனதால் வீட்டில் சொல்லாமல் மறைத்தார்.
அழகே அழகு:
மலர், தன் கணவர் பிரச்சனையில் இருப்பதை புரிந்து கொண்டு விசாரித்தார். பாக்கியராஜ் உண்மையை சொல்லிவிட்டார். பின் மலர், தன்னிடம் இருந்த பணத்தை கொடுத்து வண்டியை மீட்க சொன்னார். பாக்கியராஜ் வேண்டாம் என்று மறுத்தார். இருந்தாலும் மலர் கட்டாயப்படுத்தியதால் பாக்கியராஜ் பணத்தை வாங்கிக் கொண்டார். அதற்கு பின் வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். வழக்கம்போல மதி, தேவையில்லாத பொருட்களை தட்டில் வையுங்கள் என்றார்.இதனால் மாமியார் மாமனார் எல்லோருமே மதி இடம் சண்டை போட்டார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ரேவதிக்கு போன் செய்து பாக்கியராஜ் விசாரிக்கிறார். ரேவதி உண்மையை சொல்ல முடியாமல் அழுது கொண்டே ஒன்றும் இல்லை என்று சொல்கிறார். இருந்தாலும் ரேவதி கஷ்டத்தில் இருப்பதை புரிந்து கொண்டு பாக்யராஜும் ரொம்பவே கஷ்டப்படுகிறார். அதற்குப்பின் வீட்டில் மதி, ஆன்லைனில் மாணவர்களுக்கு கிளாஸ் எடுத்துக் கொண்டிருக்கிறார். இதை கவனித்த மாமியார் வழக்கம் போல மதியை திட்டிக் கொண்டிருக்கிறார். மலர் எடுத்துச் சொல்லி புரிய வைக்கிறார். ஆனால், மாமியார் கேட்ட பாடு இல்லை.

சீரியல் ட்ராக்:
கோபத்தில் மாமியார், மதி லேப்டாப்பை மூடி வைத்து விடுகிறார். அதோடு மாமனார் கணவர் வீட்டில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலை செய் என்றெல்லாம் கண்டிஷன் போடுகிறார். இதையெல்லாம் கேட்டு மதிக்கு கோபம் வருகிறது. அதோடு அந்த இடத்தில் இருந்த சுரேஷ், இதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் தன்னுடைய வேலையை செய்து கொண்டிருக்கிறார். இதனால் மதி, உங்கள் வீட்டில் இவ்வளவு கண்டிஷன் போடுகிறார்கள். எதுவுமே பேசாமல் இருக்கிறீர்கள் நியாயமா? என்று கேட்கிறார். சுரேஷ், எல்லாத்துக்கும் குறை சொல்லாதே. என் அம்மா அப்பா சொல்வதை மட்டும் கேளு. அதுதான் உன் வேலை என்று திட்டி விட்டு செல்கிறார்.






