பிரபல தொகுப்பாளர் கார் விபத்தில் மரணம்..! சோகத்தில் ரசிகர்கள்..! புகைப்படம் உள்ளே

0
1197
Anchorn chandan dead

சமீப காலமாக சாலையில் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து கொண்டு தான் வருகிறது. சாலை விபத்துகளில் சிக்கி சில பிரபலங்கள் உயிரிழந்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்னர் கூட கேரள பெண் செய்தியாளர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்நிலையில் தற்போது கன்னட தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

chandan

கன்னட தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் சந்தன். கன்னட மக்களிடையே பல ரசிகர்களை கொண்டுள்ள இவர் ஒரு சில கன்னட படத்திலும் நடித்துள்ளார். மேலும் இவர் பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை வைத்து ஒரு சிறப்பு தொலைக்காட்சியில் நிகழ்ச்சியை நடத்தி கன்னட மக்களிடையே பேரம் பிரபலமடைந்தார்.

சமீபத்தில் தனது நண்பர்கள்ளுடன் பெங்களூரு, ஹப்பாளியை நோக்கி மிக வேகமாக காரில் சென்றுள்ளார் சந்தன். அப்போது சாலையின் ஓரத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு லாரியின் மீது மோதியுள்ளது. இதனால் அவர் சென்ற கார் சாலையில் சுக்கு நூறாக நொறுங்கியுள்ளது.

chandan anchor

இந்த விபத்தில் அவருடன் சென்ற நண்பர்கள் இருவரும் காயங்களுடன் தப்பித்து விட்டனர். ஆனால் அந்த காரை ஓட்டிச்சென்ற சந்தன் மோசமான காயங்கள் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த தகவலை கேட்ட அவரது ரசிகர்களும்,உடன் வேலை செய்யும் நபர்களும் மிகுந்த சோகத்தில் அழ்ந்துள்ளனர்.