ஒன்னும் பெருசா இல்லாத ஒரு சாதாரண Drama, சொல்றதுக்கு ஒன்னும் இல்ல – விமர்சித்த ஆந்திரா பாக்ஸ் ஆபீஸ். தமிழ் ரசிகர்கள் பதிலடி.

0
223
ponniyin
- Advertisement -

பல ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக இயக்குநர் மணிரத்னம் இயக்கி இருக்கிறார். இயக்குனர் மணிரத்னம் எப்போதும் வித்யாசமான கதைகளை இயக்கி உலகிற்கு கொடுப்பதில் கைத்தேர்ந்தவர்.இவர் இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் தற்போது இயக்குநர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக இயக்கி இருக்கிறார். இந்த கதையை பல பேர் முயற்சி செய்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

ஆனால், அதை மணிரத்னம் தான் சாதித்து காட்டி இருக்கிறார். மேலும், பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. மேலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனம் பெற்று வரும் இந்த படத்தை பாகுபாலியுடன் ஒப்பிட்டு தெலுங்கு ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர்.

- Advertisement -

இதற்கு தமிழ் ரசிகர்கள் பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த படத்தில் டீசர் வெளியான போது இந்த படத்தை பாகுபலி ஆர் ஆர் போன்ற படங்களுடன் ஒப்பிட்டு தெலுங்கு ரசிகர்கள் பொன்னியின் செல்வன் படத்தை கேலி செய்து வந்தார்கள் இதற்கு தமிழ் ரசிகர்களும் கொடுத்து வந்தார்கள் அதிலும் குறிப்பாக பாகுபலி திரைப்படமே பொன்னியின் செல்வன் நாவலின் இன்ஸ்பிரேஷன் தான் என்று தமிழ் ரசிகர்கள் பலர் தெலுங்கு ரசிகர்களுக்கு ஆதாரத்துடன் பதிலடி கொடுத்து வந்தனர்.

கடந்த 2011 ஆம் ஆண்டு ராஜமவுலி தன்னுடைய அடுத்த படத்தை பிரபாஸை வைத்து இயக்குவதாக கூறியிருந்தார். இதை தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு தான் பாகுபலி படத்தின் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தனர். இப்படி ஒரு நிலையில் பாகுபலி திரைப்படம் வெளியாகும் முன்னரே பொன்னியன் செல்வன் நாவல் குறித்து ராஜமௌலி பதிவிட்டிருக்கும் பதிவு ஒன்றும் வைரலானது.

-விளம்பரம்-

கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி ட்விட்டரில் ரசிகர் ஒருவர் ராஜமௌலி இடம் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் மற்றும் சிவகாமியின் சபதம் நாவல்களை நேரமிருந்தால் படித்து பாருங்கள் என்று கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த ராஜமௌலி பொன்னியின் செல்வன் நாவலை படித்தேன் மிகவும் அற்புதமான கதை மற்றும் கதாபாத்திரங்கள் என்று பதிவிட்டு இருந்தார்.

அப்படி எனில் பாகுபலி படத்தை எடுக்கும் முன்னரே ராஜமவுலி பொன்னியின் செல்வன் நாவலை படித்திருக்கிறார். அதனால் தான் பாகுபலி படத்தில் பொன்னியின் செல்வன் நாவலில் இருந்து பல விஷயங்களை எடுத்து காட்சிப்படுத்தியிருக்கிறார். ஆனால், ரசிகர்கள் பலரும் பாகுபலி திரைப்படம் மகாபாரதம் கதையின் இன்ஸ்பிரேஷன் என்று கூறி வருகிறார்கள். இப்படி ஒரு நிலையில் தான் பாகுபலி திரைப்படத்தில் பொன்னியின் செல்வன் நாவலில் இடம்பெற்ற காட்சிகளை போலவே ஒத்துப் போகும் பல்வேறு காட்சிகள் இடம் பெற்று இருப்பதாக கூறி புகைப்படங்களை சமூக வளைத்தளத்தில் தமிழ் ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள்.

இப்படி ஒரு நிலையில் தெலுங்கு ஊடகம் ஒன்று பொன்னியின் செல்வன் படம் குறித்த விமர்சனம் ஒன்றை வெளியிட்டு இருந்தது, அதில் . எந்த ஒரு கவரக்கூடிய ஆக்ஷனோ அல்லது அழுத்தமான கதையோ இல்லாத ஒரு சாதாரண சரித்திர டிராமா. அதை தவிர சொல்ல வேறு ஒன்றும் இல்லை என்று குறிப்பிடபட்டுள்ளது. இதை பார்த்த தமிழ் ரசிகர்கள் பலரும் ‘ஆம், புலியையும் மானையும்..ஒன்னா கூண்டுல, பனைமரத்துல கல்ல விடல, விட்டா ஊ சொல்றயா பாட்டு கேப்பீங்க போல’ என்று பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Advertisement