இங்க இருக்கவங்களுக்கு என் மதிப்பு தெரில.! நான் பேட்டி கொடுக்க மாட்டேன்.! ஆண்ட்ரியா.!

0
475
andrea

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை ஆண்ட்ரியா. சமீபத்தில் வெளியான வடசென்னை படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டபட்டது. தற்போது தில் சத்யா என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள மாளிகை என்ற படத்தில் நடித்து வருகிறார் .

இந்தப் படத்தில் ஆன்ட்ரியா காவல்துறை அதிகாரியாகவும், கடந்த காலத்தின் இளவரசியாகவும் இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். சாந்தி பவானி என்டெர்டெயின்மெண்ட் சார்பாக கமல்போரா, ராஜேஷ் குமார் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர்.

- Advertisement -

இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பேசிய ஆண்டிரியா ‘ இந்தப்படம் முதலில் கன்னடத்தில் பண்ண வேண்டிய படமாகத்தான் இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் ஆண்ட்ரியாவிற்கு தமிழில் மார்க்கெட் இருக்கு. அதனால், தமிழில் எடுக்க வேண்டும் என்று சொன்னார்.

ஒரு இந்தி தயாரிப்பாளர், கன்னட இயக்குனர் இருவருக்கும் எனக்கு தமிழில் மார்க்கெட் இருக்கிறது என்று தோன்றி இருப்பது மகிழ்ச்சி. ஆனால் இங்கு இருப்பவர்களுக்கு ஏதும் தோன்றவில்லை என்று மிகவும் வருத்தத்துடன் பேசி இருந்தார்.

-விளம்பரம்-

அதன் பின்னர் பத்திரிகையாளர்கள் பேட்டி எடுக்க காத்திருந்த போது பத்திரிகையாளர்கள் சிலர் ‘நீங்கள் சிகரெட் பிடிப்பீர்களா, சரக்கு அடிப்பீர்களா?’ போன்ற கேள்வியை கேட்டனர். அதனால் கோபமடைந்த ஆண்ட்ரிய உங்களுக்கு யாருக்கும் பேட்டி தரமாட்டேன் கூறிவிட்டு கோபமுடன் புறப்பட்டார்.

Advertisement