தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை ஆண்ட்ரியா. சமீபத்தில் வெளியான வடசென்னை படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டபட்டது. தற்போது தில் சத்யா என்பவர் இயக்கத்தில் உருவாகியுள்ள மாளிகை என்ற படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த சில காலமாக பட வாய்ப்புகள் அம்மணிக்கு சரிவர அமையாததால் மற்ற நடிகைகளை போல கவர்ச்சியை கையில் எடுத்தார் ஆண்ட்ரியா. அதன் பின்னர் அம்மணிக்கு பல படங்களின் வாய்ப்புகள் வந்த வண்ணம் இருந்தது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘வடசென்னை’ படத்தில் நடிகர் அமீருடன் மேலாடை இல்லாமல் ஒரு காட்சியில் நடித்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.
இதையும் பாருங்க : 4 பேர லவ் பண்றது காமெடியா.! கவினை வச்சு செய்யும் கஸ்தூரி.!
மேலும், பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியும் உள்ளார் ஆண்ட்ரியா. இந்த நிலையில் தனது வாழ்வில் நடந்த சோகங்களை முறிந்த சிறகுகள் என்ற கவிதையாக வெளியிட்டுள்ள ஆண்ட்ரியா திருமணமான ஆண் நம்முடன் தொடர்பு வைத்திருப்பதாகவும் அதனால் அந்த காலம் தன்னுடைய வாழ்விலேயே இருண்ட காலமாக இருந்தது.
தவறான தொடர்பால் மனதளவிலும் உடல் அளவிலும் பெரிய பாதிப்பை சந்தித்துள்ளேன். அந்த பாதிப்பில் இருந்து மீண்டு வர தற்போது முயற்சி செய்துள்ளேன் என்றும் கூறியுள்ளார் ஆண்ட்ரியா. ஆனால், அந்த திருமணமான நபர் யார் என்பது தான் தெரியவில்லை