என் டீ-ஷர்ட்க்கு உள்ள கையவிட்டான் – ஆண்ட்ரியா சொன்ன பதைபதைக்கும் விஷயம். ச்சீ, இப்படி கூடவா பண்ணுவானுங்க.

0
497
andrea
- Advertisement -

இயக்குனர் சுந்தர் ஸ்ரீ இயக்கத்தில் வெளியான அரண்மனை 3 படத்தில் கடைசியாக நடித்த நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா ஜெரேமியா அடுத்ததாக “அனல் மேல் பனித்துளி ” திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தான் ஒரு பிரபல செய்தி சேனலின் நேர்காணலில் பேசியுள்ள ஆண்ட்ரியா “அனல் மேல் பனித்துளி” படத்தில் நடித்தது பற்றியும் அவரது அனுபவம் பற்றியும் சொல்லியிருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-

இப்படமானது இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படத்தை இயக்குனர் கைசர் ஆனந்த் இயக்குகிறார் அதோடு வெற்றிமாறனின் விருப்பமான ஒளிப்பதிவாளரான ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இப்படத்தில் கதாநாயகியாக ஆண்ட்ரியா ஜெரோமியாவும் நடிகர் ஆதவ் கண்ணதாசன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

படத்தைப்பற்றி ஆண்ட்ரியா கூறியது :

இப்பாடமானது திரையரங்குகளுக்கு பதிலாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமஷனுக்கான நேர்காணலின் போது இப்படத்தின் நடிகையான ஆண்ட்ரியா பேசிய போது ”இப்படத்தில் நடிக்கும் சில காட்சிகளில் எனக்கு மட்டுமில்லை படத்தில் நடிக்கும் அனைவருக்குமே அதிர்ச்சிகரமாக இருந்தது. நாங்கள் திரைப்படத்தில் நடிப்பதே இவ்வளவு கடினமாக இருக்கிறதே ஆனால் இந்த விஷயம் உண்மையாகவே வெளியுலகில் நடப்பதை நினைத்தால் வயிறே கலங்குகிறது என்று கூறினார்.

தனக்கும் நடந்தது :

படத்தை பற்றி பேசிக்கொண்டே தனக்கு நடந்ததை பற்றியும் கூறினார் அதில் தான் இப்போது மிகவும் பாதுகாப்பாக இருக்கிறேன் ஆனால் நான் சிறுவயதாக இருக்கும் போது தன்னை ஆபாசமாக தீண்டியது நடந்திருக்கிறது. உதாரணமாக பைக்கில் வந்து பின்னாடி தட்டிவிட்டு செல்வார்கள் ஆனால் அதை நாங்கள் சகஜம் என்று வைத்துக்கொள்வோம். ஆனால் அதுதான் தவறு அப்படி இருப்பதனால்தான் இன்று சில சொல்லவே கூசும் நிகழ்வுகள் எல்லாம் பெண்களுக்கு சமுதாயத்தில் நடந்து வருகிறது என்றும் தன்னுடைய ஆதங்கத்தை ஊறியிருந்தார். மேலும் சிறு வயதில் தனக்கு நடந்த மோசமான அனுபவம் ஒன்றையும் கூறி இருக்கிறார் ஆண்ட்ரியா.

-விளம்பரம்-

ஆண்களுக்குத்தான் சாதகமா :

அதில் அவர் எனக்கு 11 வயது இருக்கும்போது நாங்கள் பேருந்தில் வேளாங்கண்ணிக்கு சென்று கொண்டிருந்தோம் அப்போது திடீரென்று எனக்கு பின்னால் யாரோ கை வைப்பது போல இருந்தது. அதை நான் முதலில் என்னுடைய தந்தையின் கை தான் என்று நினைத்தேன். ஆனால், திடீரென்று என் டீ ஷர்ட்டுக்குள் அந்த கை நுழைந்தது. நான் என்னுடைய தந்தையின் கைதான் என்று ஆனால் என் தந்தை கை என் கண் முன்னாடி தான் இருக்கிறது. இதைப் பற்றி நான் என்னுடைய அம்மா அப்பா இருவரிடமும் சொல்லவில்லை.

நானே கொஞ்சம் முன்னாள் சென்று அமர்ந்து கொண்டேன். இதை நான் ஏன் என்னுடைய பெற்றோர்களிடம் சொல்லவில்லை என்று தெரியவில்லை. என் அப்பாவிடம் சொல்லி இருந்தார் அவர் கண்டிப்பாக ஏதாவது செய்திருப்பார். ஆனாலும், இது போன்ற விஷயமெல்லாம் நடந்தால் வெளியில் சொல்லக்கூடாது என்று தான் நம்முடைய சமூகம்நம்மை வளர்த்து இருக்கிறது. அதற்கு பிறகு அரை குறை ஆடைகளை பற்றி பேசிய ஆண்ட்ரியா சில நாடுகளில் ஹஜாப் அணிவது குற்றம் , சில நாடுகளில் ஹஜாப் அணியவில்லை என்றால் சுட்டு கொன்று விடுவார்கள். அப்படி இருக்கும் போது ஹஜாப் முக்கியமா அல்லது ஹஜாப்பிற்குள் இருக்கும் மனிதன் முக்கியமா என்று’

Advertisement