‘அன்றே சொன்ன ரஜினி’ – ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் வந்த ஹேஷ் டேக். என்ன காரணம் தெரியுமா ?

0
1012
rajini
- Advertisement -

இந்தியாவில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கொரோனாவின் தாக்கத்தால் பலரும் அவதிப்பட்டு வருகின்றனர். தமிழகத்தை விட வட மாநிலங்களில் கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் அதிகரித்து தான் வருகிறது. இதனால் தமிழ் நாடு உட்பட பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும் ஞாயிற்று கிழமை முழு நேர ஊரடங்கும் அமுலுக்கு வந்துள்ளது. இந்த கொடிய வைரஸால் பல லட்சம் பேர் இதுவரை பலியாகியுள்ளனர். கொரோனா தாக்கம் ஒரு புறம் இருக்க, பல மாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதிலும் கொரோனா அதிகமாக பாதித்து வரும் குஜராத், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

-விளம்பரம்-

அதே போல தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையால் மீண்டும் பல பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் ட்விட்டரில் அன்றே சொன்ன ரஜினி என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டிங்கில் வந்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடிகர் ரஜினி, தான் அரசியலுக்கு வரப் போவது இல்லை என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், நான் கட்சியை ஆரம்பித்த பிறகு ஊடகங்கள் சமூக வலைதளங்கள் மூலமாக மட்டும் பிரச்சாரம் செய்தால் மக்கள் மத்தியில் நான் நினைக்கும் அரசியல் எழுச்சியை உண்டாக்கி தேர்தலில் பெரிய வெற்றியை பெற முடியாது இந்த யதார்த்தத்தை அரசியல் அனுபவம் வாய்ந்த யாரும் மறுக்க மாட்டார்கள்.

இதையும் பாருங்க : கழட்டி விட்ட ஜீ தமிழ், டிவி சீரியலுக்கு வந்த செம்பருத்தி சீரியல் வில்லி – அவரே வெளியிட்ட தகவல் இதோ.

- Advertisement -

நான் மக்களை சந்தித்து கூட்டங்களை கூட்டி பிரச்சாரத்திற்கு சென்று ஆயிரக்கணக்கான ஏன் லட்சக்கணக்கான மக்களை சந்திக்க வேண்டியிருக்கும்.என் உயிர் போனாலும் பரவாயில்லை. நான் கொடுத்த வாக்கை தவற மாட்டேம். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி இப்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமா என்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக என்னை நம்பி என் கூட வருபவர்களை நான் பலிகடா ஆக்க விரும்பவில்லை.ஆகையால் நான் கட்சி ஆரம்பித்து, அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருந்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதை அறிவிக்கும் போது எனக்கு ஏற்பட்ட வலி எனக்கு மட்டும் தான் தெரியும். இந்த முடிவு ரஜினி மக்கள் மன்றத்தினருக்கும் நான் கட்சி ஆரம்பிப்பேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கும் மக்களுக்கும் ஏமாற்றத்தை அளிக்கும். மன்னியுங்கள்.மக்கள் மன்றத்தினர் கடந்த 3 ஆண்டுகளாக என் சொல்லுக்குக் கட்டுப்பட்டு ஒழுக்கத்துடனும், நேர்மையுடனும், கொரோனா காலத்திலும் தொடர்ந்து மக்களுக்கு சேவை செய்திருக்கின்றீர்கள். அது வீண் போகாது. அந்த புண்ணியம் என்றும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காப்பாற்றும்.

-விளம்பரம்-

நான் உண்மையை பேச என்றுமே தயங்கியதில்லை. உண்மையையும், வெளிப்படைத் தன்மையையும் விரும்பும் என் நலத்தில் அக்கறையுள்ள என் மேல் அன்பு கொண்ட என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களும், தமிழக மக்களும் என்னுடைய இந்த முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று ரஜினி கூறி இருந்தார். மக்களின் நலன் கருதி கொரோனா இரண்டாம் அலை பற்றி ரஜினி அன்றே சொன்னார் என்று ட்விட்டரில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement