கழட்டி விட்ட ஜீ தமிழ், டிவி சீரியலுக்கு வந்த செம்பருத்தி சீரியல் வில்லி – அவரே வெளியிட்ட தகவல் இதோ.

0
10213
thallattu
- Advertisement -

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் இல்லத்தரசிகள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் மக்களிடையே அதிக ஆதரவும்,அன்பும் பெற்ற சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் தான். இப்போது இருக்கும் டாப் சீரியல்களில் செம்பருத்தி சீரியலும் ஒன்று. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடரில் ஆதித்யா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக்கும், பார்வதி என்ற கதாபாத்திரத்தில் சபானாவும், அவருக்கு ஜோடியாக ஆபிஸ் புகழ் கார்த்தியும் நடிக்கின்றனர்.

-விளம்பரம்-
Thalattu Serial Cast, Actress Name, Timings, Starting Date, Story, Wiki -  Daily News Catcher

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்த சீரியலில் இருந்து கார்த்தி விலகினார். கார்த்தி விலகிய பின்னர் இந்த சீரியலின் TRP மரண அடி வாங்கியது. ஏற்கனவே இந்த சீரியலில் இருந்து ஜனனி கூட இந்த சீரியலில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அதே போல இந்த சீரியலில் மித்ரா என்ற கதாபத்திரத்தில் நடித்த பரதா நாயுடு நடித்து வந்த நிலையில் இவர் தற்கொலை செய்து கொண்டது போல சீரியலில் இவரது கதாபாத்திரம் நிறைவடைந்தது.

இதையும் பாருங்க : அருண் விஜய் குடும்பத்தில் நேர்ந்த இழப்பு – அவரது மனைவி பகிர்ந்த புகைப்படம். (இவரும் சினிமா பிரபலமாச்சே)

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இவர் சன் தொலைக்காட்சியில் சமீபத்தில் துவங்கப்பட்டுள்ள ‘தாலாட்டு’ சீரியலில் கமிட் ஆகியுள்ளார். இந்த சீரியலில் நடிகர் கிருஷ்ணாவும் நடிகை சுருதி ராஜும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் இந்த சீரியலில் கமிட் ஆகி இருக்கிறார் பரதா நாயுடு. ஏற்கனவே இவர் செம்பருத்தி சீரியலில் ‘மித்ரா’ என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார். எனவே, இந்த சீரியலிலும் இவருக்கும் வில்லி கதாபாத்திரமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இது ஒரு புறம் இருக்க, கடந்த ஆகஸ்ட் மாதம் செம்பருத்தி சீரியல் கேமரா மேன் அன்பு காலமான போது பரதா நாய்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் பேசி இருந்த அவர், எனது ஒன்றரை வருட செம்பருத்தி தொடர் பயணத்தில் நிறைய அரசியலைச் சந்தித்தேன். பெரிய போர்க்களமே. அப்போது தனியாக இருந்த எனக்கு ஒளிப்பதிவாளரும், இயக்குநரும் தான் உத்வேகம் அளித்தார்கள். எப்போதுமே எனக்கு உறுதுணையாக இருந்தார். சில நாட்களுக்கு முன்னர் தான் அவரிடம் பேசினேன். அவரைப் பற்றி திடீரென இப்படி ஒரு செய்தி நான் எதிர்பார்க்கவே இல்லை. சுற்றியிருப்பவர்கள் என்ன பேசினாலும் சாதிப்பதை மட்டுமே யோசி என்று எப்போதும் சொல்வார் என்று கண்ணீர் மல்க கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement