தமிழ் சினிமாவில் இசையில் ராக் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் அனிருத் ரவிச்சந்திரன். தன்னுடைய இளம் வயதிலேயே இசையின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். இவர் இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பன்முகங்களை கொண்டு திகழ்கிறார். ஆரம்பத்தில் இவர் பல கச்சேரிகளில் பாடி இருக்கிறார். பின் 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த 3 படத்தின் மூலம் தான் அனிரூத் சினிமாவுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகி இருந்தார். அதுவும் ‘ஒய் திஸ் கொலவெறி’ என்ற பாடலின் மூலம் இவர் உலக அளவில் பிரபலம் ஆனார். அதனை தொடர்ந்து இவர் அஜித், விஜய், கமல், ரஜினி என்று பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார்.
மேலும், இவரது மெலோடி பாடல்கள், குத்து பாடல்கள் எது என்றாலும் ரசிகர்கள் மத்தியில் சும்மா கிழி தான். அதோடு சமீபத்தில் வெளியாகி இருந்த சிவகார்த்திகேயனின் டாக்டர், டான், பீஸ்ட், விக்ரம் போன்ற படத்திற்கு அனிருத் தான் இசையமைத்து இருந்தார். இந்த படங்களில் எல்லாம் தன்னுடைய இசையில் பட்டையை கிளப்பி இருந்தார் அநிருத்த. என்னதான் இசையில் பெயர் எடுத்தாலும் பீப் பாடல் துவங்கி சுச்சி லீக்ஸ் வரை பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார் அனி.
அனிருத் – ஆண்ட்ரியா காதல் :
அதிலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவரது ஆபாச வீடியோ என்று சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ பெரும் வைரலானது. இப்படி இருக்க கடந்த சில ஆண்டுக்கு முன்னர் தமிழ் சினிமாவில் பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தி இருந்த சுச்சி லீக்ஸ்ஸின் போது அனிருத் மற்றும் ஆண்ட்ரியாவின் புகைப்படம் ஒன்று வைரலானது. மேலும், அனிருத்தும், ஆண்ட்ரியாவும் காதலித்தனர் என்று கூறப்பட்டது.
காதல் பிரிந்த காரணம் :
இப்படி ஒரு நிலையில் கடந்த சில ஆண்டுக்கு முன்னர் ஆண்ட்ரியாவுடனான காதல் குறித்து பேசி இருக்கிறார் அனி. அதில் ‘நானும் ஆண்ட்ரியாவும் பிரேக் கப் செய்துவிட்டோம். அது உண்மையான காதல் என்று சொல்ல முடியாது. நான் அவரை காதலிக்கும் போது எனக்கு 19 அவருக்கு 25 வயது. இருவருக்கும் வயது செட் ஆகவில்லை. அதனால் தான் பிரிந்துவிட்டோம்’ என்று பேசி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
அனிருத் குறித்து ஜோனிதா :
இது ஒருபுறம் இருக்க இளம் பின்னணி பாடகியான ஜோனிடா காந்தி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து இருந்தார். அப்போது அவரிடம் விளையாட்டாக திருமணம் குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்கள். அதில் சூர்யா, ரன்வீர் சிங், அனிருத் இந்த மூவரில் யாரை திருமணம் செய்து கொள்வீர்கள்? என்று கேட்டிருந்தார்கள். அதற்கு அவர், இந்த மூவரில் அனிரூத் மட்டும் தான் திருமணம் செய்யவில்லை. அந்த காரணத்தினால் மட்டும் நான் அவரை திருமணம் செய்து கொள்வேன் என்று பதிலளித்திருந்தார்.
அனிருத் – கீர்த்தி கிசுகிசு :
ஜோனிதாவும் அனிருத்தும் இணைந்து பல பாடல்களை பாடி இருக்கின்றனர். அதே போல சமீபகாலமாக அனிருத்தின் திருமணம் குறித்து பல செய்திகள் சோஷியல் மீடியாவில் வந்த வண்ணம் இருக்கிறது. சமீபத்தில்கூட பிரபல நடிகை கீர்த்தி சுரேஷை, அனிருத் திருமணம் செய்து கொள்ளப்போவதாக கிசுகிசுக்கள் எழுந்தது. ஆனால், பின்னரே அது முற்றிலும் கிளப்பிவிடப்பட்ட வதந்தி என்று தெரிய வந்தது.