‘அவருக்கு அது தெரிஞ்சி போச்சு’ – ஒரு நாளைக்கு 180 சிகிரெட் புடித்த வெற்றிமாறன் சிகிரெட்டை விட்ட காரணம் குறித்து சொன்ன வெற்றிமாறன் மனைவி

0
1579
Vetrimaran
- Advertisement -

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் வெற்றிமாறன். பொல்லாதவன் முதல் இறுதியாக வெளியான விடுதலை படம் வரை இவர் இயக்கிய அணைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. . வெற்றிமாறன் அவர்கள் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பூந்தென்றல் என்ற ஒரு மகள் உள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வெற்றிமாறனின் மனைவி ஆர்த்தி வெற்றி மாறனின் சிகரெட் பழக்கம் குறித்து பேசி இருக்கிறார்.

-விளம்பரம்-

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வெற்றிமாறன் ‘ நான் 13 வயதில் இருந்து 33 வயது வரை புகை பிடித்தேன். அதிலும் பொல்லாதவன் படத்தில் அதிகமாக பிடித்தேன். ஒரு நாளைக்கு 15 பாக்கெட் சிகெரெட் காலி செய்வேன். அதுகூட பசங்க சொல்லி தான் எனக்கே தெரியும்.அந்த அளவிற்கு எனக்கு தெரியாமல் புகை பிடிப்பேன். ஒரு குறிப்பிட்ட காலம் வரை நாம் தொடர்ந்து புகை பிடித்துக் கொண்டிருந்தால் நம்முடைய உடல் நமக்கு ஒத்துழைக்காது.

- Advertisement -

பிறகு நான் மருத்துவரை அணுகினேன். அவர் ஆஞ்சியோ பண்ணிப் பார்க்கலாமா என்று சொன்னார். நானும் ஆஞ்சியோ பண்ணி பார்த்தேன். ஆனால், எனக்கு ஒன்னும் இல்லை என்று தெரிந்தது.இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக புகைபிடித்தலை விட்டுவிட முடிவு செய்தேன். அப்ப தான் வாரணம் ஆயிரம் படம் பார்த்தேன். அந்த படத்தை பார்த்த பிறகு தான் சிகரெட் பிடிப்பதை நிறுத்தி விடலாம் என்ற எண்ணம் எனக்கு வந்தது. அந்த படம் பார்த்துவிட்டு நான் ஒரு சிகரெட் பிடித்தேன்.

அதற்கு பிறகு நான் இன்னும் சிகரெட் பிடிக்கவில்லை. முழுமையாக நிறுத்தி விட்டேன் என்று கூறி இருந்தார். வெற்றிமாறன் சிகிரெட் பழக்கத்தை நிறுத்தியது குறித்து பேசிய வெற்றிமாறனின் மனைவி ‘அவர் எடுத்த மிகவும் கடினமான முடிவுகளில் ஒன்று என்றால் அது புகைபிடிப்பதை விடுவது தான். 2003இல் அந்த முடிவை எடுத்தார். எனக்கு நெஞ்சு வலிப்பது போல் இருக்கிறது என்று சொன்னார்.

-விளம்பரம்-

அப்போது ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஆஞ்சியோ செய்தோம். அப்போது மருத்துவர்கள் நீங்கள் புகை பிடிப்பதை விட வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு செல்லும் வழியிலேயே காரை நிறுத்த சொல்லி ஒரு சிகரெட் வாங்கி தம்மடித்தார். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. ஆனால் அப்போது கூட நான் அவரை புகைப்பிடிப்பதை நிறுத்த சொல்லி வற்புறுத்தவில்லை.

இருந்தும் நான் சொல்லிக் கொண்டே இருந்தேன். ஆனால் போகப் போக தான் நலமாக இருந்தால்தான் தன்னுடைய கனவில் சாதிக்க முடியும் என்று புரிந்து கொண்டார். அவருக்கு புரிந்து விட்டது பெரிய கனவை வைத்திருக்கிறோம் அதற்கு குறைந்தபட்சம் ஆரோக்கியமாவாவது இருக்க வேண்டும் என்று மேலும் அந்த படத்தை பார்த்து அதை எல்லாம் விட்டுவிட்டார். மேலும், அவரது ஆபீசில் கூட யாரும் புகைபிடிக்கக் கூடாது என்று சொல்லிவிட்டார் என்று கூறியுள்ளார்.

Advertisement