மீண்டு வா மகனே. சுஜித்துக்காக அனிதா குப்புசாமி பாடிய பாடல்.

0
3756
pushpavanam-kuppusamy
- Advertisement -

ஆழ்துளை கிணற்றில் உள்ள சுர்ஜித் நிலை குறித்து தமிழகமே கதிகலங்கி உள்ளது. மேலும், போர்வெல் எந்திரங்களும் தீவிரமாக சுர்ஜித்தை எப்படியாவது எடுக்க வேண்டும் என முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். தற்போது சுர்ஜித் 86 அடி ஆழத்திற்கு சென்று உள்ளார் என்ற தகவலும் வெளிவந்துள்ளது. மேலும், போர்வெல் 48 அடி வரை துளை போட்டு உள்ளார்கள் என்றும் தெரியவந்துள்ளது.திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டு பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்து விட்டான். மேலும்,இந்த கோர சம்பவம் கடந்த 3 நாட்களாக நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. ஆழ்துளை கிணற்றில் வெள்ளிக்கிழமை மாலை 5. 40 மணி அளவுக்கு விழுந்த குழந்தை முதலில் 26 அடியில் சிக்கியது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக 85 அடி ஆழத்திற்கு சென்று விட்டது குழந்தை.

-விளம்பரம்-
Image result for surjith"

ஆழ்துளை கிணற்றுக்குள் சிக்கிய குழந்தையை மீட்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறார்கள் அரசாங்கமும்,மக்களும். ஆனால், எல்லா முயற்சிகளும் தோல்வியில் தான் போய் முடிகிறது. இந்நிலையில் தற்போது குழந்தையை மீட்க ஒரு புதிய முயற்சியை மேற்கொண்டு வருகின்றது. அது ஆழ்துளை கிணறு அருகே சுரங்கம் போல் ஒரு குழியைத் தோண்டி அதன் வழியாக குழந்தையை மீட்கலாம் என்று முடிவு செய்து அதற்கான வேலைகளும் பரபரப்பாக சென்று கொண்டு இருக்கிறது. அதனை தொடர்ந்து என்எல்சி, ஒஎன்ஜிசி மற்றும் தனியார் அமைப்புகள் இணைந்து போர்வெல் அமைக்கும் கருவி மூலம் குழி தோண்டி சுரங்கம் போல் செய்து கொண்டு வருகின்றார்கள். ஆனால், ஆழ்துளை கிணறு பகுதியில் குழி தோண்டி செல்லும்போது அங்கு பாறைகள் அதிகமாக இருப்பதால் சுரங்கப் பாதையை ஏற்படுத்துவதில் கொஞ்சம் தாமதமாகிறது என தெரியவந்துள்ளது.

இதையும் பாருங்க : ஆசைப்பட்டு கேட்ட நமீதா. இறுதிவரை கொடுக்காத பிக் பாஸ். இதான் அந்த பொருளாம்.

- Advertisement -

மேலும், குழந்தையை எப்படியாவது உயிருடன் மீட்க வேண்டும் என்று மக்களும், அரசாங்கமும் போராடி வருகின்றனர். மேலும், குழந்தை மூச்சு விடுவதற்கு oxygen மற்றும் குழந்தை பயமில்லாமல் இருப்பதற்காக உபகரன்கள் எல்லாம் செய்து வருகிறார்கள். மூன்று நாட்கள் கடந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் இருந்து சுர்ஜித்தை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சாதி,மதம்,மொழி,இனம் எல்லாவற்றையும் மறந்து தமிழக மக்கள் சுர்ஜித் நிலை குறித்து பிராத்தனையும்,பூஜைகளும் செய்து வருகிறார்கள். மக்கள் சுர்ஜித் நலமுடன் மீண்டும் வரவேண்டும் என்றும், எந்த ஒரு அசம்பாவிதமும் நடக்கக்கூடாது என தமிழக மக்கள் கலங்கிப் போய் உள்ளார்கள்.

இந்நிலையில் பிரபலமான நாட்டுப்புற பாடகர் மற்றும் திரைப்பட பின்னணிப் பாடகராக இருப்பவர் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அவருடைய மனைவி அனிதா குப்புசாமி. இவர்கள் இணைந்தும் சுர்ஜித் இன் நிலையை வருத்தத்துடன் தெரிவித்து வருகிறார். மேலும், இவர்கள் கிராமப்புற பாடல்களை எழுதுவதில் வல்லவர். அதனால் இவர்கள் “மீண்டும் வா மகனே மீண்டும் வா மகனே” என சுர்ஜித்க்காக பாடிய பாடல் அனைவர் நெஞ்சையும் உலுக்கும் அளவிற்கு உள்ளது. அதோடு வராத கண்களில் கூட ஈரம் சிந்தும் அளவிற்கு அவருடைய பாடல் இருந்தது. மேலும், சுர்ஜித்தை எப்படியாவது மீட்டு எடுக்க வேண்டும் என்று அரசாங்கமும் மக்களும் தீவிரமாக உள்ளனர். அனைவரும் சுர்ஜித் நலமுடன் மீண்டும் வரவேண்டும் என கண்ணிர் மல்க வேண்டி கொள்கிறார்கள்.

-விளம்பரம்-
Advertisement