ஆசைப்பட்டு கேட்ட நமீதா. இறுதிவரை கொடுக்காத பிக் பாஸ். இதான் அந்த பொருளாம்.

0
41574
namitha
- Advertisement -

‘மச்சான்’ என்ற ஒரு வார்த்தையின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர் நடிகை நமீதா. நமீதா அவர்கள் தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் மொழியில் மட்டுமன்றி கன்னடம், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற பல மொழிகளில் தன்னுடைய நடிப்பு திறனை காட்டியுள்ளார். இவர் பெரிதும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் தான் நடித்து புகழ் பெற்றுள்ளார். இவர் சினிமா திரை உலகிற்கு தெலுங்கு மொழியில் காதல் திரைப்படமான ‘சொந்தம்’ என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். பின்னர் தமிழில் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த ‘எங்கள் அண்ணா’ படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து ‘மாயா’ என்ற ஆங்கிலப் படத்திலும் நமீதா நடித்துள்ளார்.

-விளம்பரம்-
Image result for bigg boss namitha"

இவர் அதிகம் தமிழ் சினிமாவில் உள்ள பழைய நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து உள்ளார் என்பது தெரிந்த விஷயம். அதுமட்டுமில்லாமல் நமிதா திரில்லர் படங்களிலும், வில்லி கதாபாத்திரத்திலும் கூட நடித்திருக்கிறார். இவர் தமிழில் பம்பரக் கண்ணாலே, அழகிய தமிழ் மகன், பில்லா, ஜெகன்மோகினி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். சினிமா உலகில் வந்த காலகட்டத்தில் நமிதாவுக்கு பட வாய்ப்புகள் வந்து குவிந்தன. பின்னர் ஒரு கட்டத்தில் அவருக்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின. அதனால் சின்னத்திரை நோக்கி பயணம் செய்தார். அது கலைஞர் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டார். சினிமா துறையில் நமீதா இல்லை என்றாலும் நமிதாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் இன்றும் வரை குறையவே இல்லை.

இதையும் பாருங்க : தீபாவளிக்கு இப்படி ஒரு மோசமான நிலையா. மஞ்சுமாவை கண்டு பரிதாபபட்ட ரசிகர்கள்.

- Advertisement -

இவர் தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சி போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். நமீதாவை பற்றி பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நிறைய விஷயங்கள் ரசிகர்கள் தெரிந்து கொண்டிருப்பார்கள். மேலும், நமிதாவுக்கு “சுத்தம், சுகாதாரம்” என்ற வார்த்தையில் அதிக ஈடுபாடு உள்ளவர். பிக்பாஸ் வீட்டில் நமிதா மற்ற போட்டியாளர்களுடன் சின்ன சின்ன சண்டைகள், வாக்குவாதம், பிரச்சனைகள் வந்தாலும், நமிதாவின் தமிழ் பேச்சுக்கு ஒட்டு மொத்த ரசிகர்களும் அடிமை என்று சொல்லலாம். ஏன்னா, அவருடைய தமிழ் பேச்சு அனைவருக்கும் பிடிக்கும். நடிகை நமீதா 2017 ஆம் ஆண்டு நவம்பர் 24-ஆம் தேதியன்று இந்திய திரைப்பட நடிகரான வீரேந்திர சவுத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Image result for bigg boss namitha"
Image result for bigg boss namitha"

தற்போது நமிதா அவர்கள் திருமணத்திற்கு பிறகு ‘அகம்பாவம்’ என்னும் படத்தில் பத்திரிகை நிருபர் என்னும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், மலையாள படத்திலும் நமீதா நடித்து வந்திருக்கிறார். சமீபத்தில் நமீதாவும் அவருடைய கணவரையும் வைத்து பிரத்தியேக நேர்காணல் நடந்தது. அதில் நமிதா எல்லா விஷயத்திலும் சுத்தம் பார்ப்பார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், அவருக்கு பல் துலக்குவதில் சோம்பேறித்தனம் என்பது நிறைய பேருக்கு தெரியாது. இதனால் நமீதா தினமும் பல் துலக்குவதற்காக எலக்ட்ரானிக் தானியங்கி இயந்திரத்தை பயன்படுத்துவாராம். இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் கூட இதனை 10 நாட்கள் பயன்படுத்தினார் என்றும், எலக்ட்ரானிக் தானியங்கி இயந்திரத்தின் பேட்டரி தீர்ந்து விட்டதால் பிக்பாஸ் இடம் எனக்கு பேட்டரி கொடுங்கள் என்று கேட்டு உள்ளார் நமீதா. ஆனால்,பிக் பாஸ் குழு கடைசி வரை நமீதா கேட்டதை கொடுக்கவில்லை என்று வருத்தத்துடன் இந்த பேட்டியில் கூறினார்.

-விளம்பரம்-
Advertisement