விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிக் பாஸ் அனிதா சம்பத்- அடடே, இந்த சீரியல் தானா

0
338
- Advertisement -

பிக் பாஸ் பிரபலம் அனிதா சம்பத் சீரியலில் என்ட்ரி கொடுக்க இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமாகி பிரபலமான நடிகையாக இருப்பவர் அனிதா சம்பத். இவர் முதலில் விஜய் நடிப்பில் வெளியான ‘சர்க்கார்’ படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அனிதா. அதன் பின்னர் இவர் சூர்யா நடிப்பில் கே.வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான காப்பான், ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் போன்ற படத்திலும் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இதன் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதன் பின் அனிதா சம்பத் அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். ஆனால், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓரிரு நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்தார். இதனால் சீக்கிரமாகவே அனிதா நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு அனிதாவிற்கு நிறைய வாய்ப்புகள் வந்தது.

- Advertisement -

அனிதா குறித்த தகவல்:

தற்போது அனிதா நிறைய விளம்பரம், படங்களில் நடித்து கொண்டு வருகிறார். மேலும், இவர் தனியாக யூடுயூப் சேனல் ஒன்று ஆரம்பித்து தன் கணவருடன் சேர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் அனிதா சம்பத் விஜய் டிவி சீரியலில் என்ட்ரி ஆக இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது, அதாவது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாக்கியலட்சுமி’ சீரியல் தான் நடிக்க இருக்கிறார்.

அனிதா நடிக்கும் சீரியல்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இதனால் இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மேலும், இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும், பாக்கியா கணவர் கோபி கதாபாத்திரத்தில் சதீசும் நடித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

பாக்கியலட்சுமி சீரியல்:

இந்த தொடர், குடும்ப பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்காக எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள், போராடுகிறார்கள் என்பதை மையப்படுத்திய கதை. நாளுக்கு நாள் பாக்கியா உடைய கதாபாத்திரம் குடும்ப பெண்களுக்கு முன் உதாரணமாகவும், எடுத்துக்காட்டாகவும் இருக்கிறது. பெண்கள் யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை இந்த சீரியல் உணர்த்துகிறது. தற்போது சீரியலில் ராதிகா கர்ப்பம் கலைந்துவிட்டது என்று அவருடைய அம்மா ஈஸ்வரி மீது போலீசில் புகார் கொடுத்திருந்தார். இதனால் போலீசும் ஈஸ்வரியை கைது செய்திருந்தார்கள்.

சீரியல் ட்ராக்:

பின் கோர்ட்டில் ராதிகா, கோபி இருவருமே சொன்ன வாக்குமூலம் ஈஸ்வரிக்கு எதிராக இருந்தது. இதனால் ஈஸ்வரி சிறைக்கு செல்வார் என்று கமலா நினைத்துக் கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து ராதிகாவின் மகள் மயூ நீதிமன்றத்தில், அம்மா பூ ஜாடி தடிக்கு தான் கீழே விழுந்தார். ஈஸ்வரி பாட்டி தள்ளிவிடவில்லை. அவர் காப்பாற்றத்தான் சென்றார் என்று கூறியிருந்தார். இதனை அடுத்து நீதிமன்றமும் ஈஸ்வரியை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்து விட்டது.

அனிதா என்ட்ரி :

இதற்குப் பிறகு கோபி- ராதிகா இடையே விரிசல் ஏற்படுமா? ராதிகா என்ன செய்யப் போகிறார்? போன்ற பரபரப்பான கட்டத்துடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் பாக்கியலட்சுமி தொடரில் அனிதா என்ட்ரி கொடுக்க இருக்கிறார். ஆனால், அவர் என்ன கதாபாத்திரம்? எப்போது இவர் வரும் காட்சி டிவியில் ஒளிபரப்பாகும்? என்ற தகவல் தெரியவில்லை. கூடிய விரைவில் இது தொடர்பாக விஜய் டிவி அறிவிக்கும். மேலும், இது தொடர்பாக பதிவு வெளியானதை பார்த்து ரசிகர்கள் பலருமே அனிதா சம்பத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement