பிரபல செய்தி வாசிப்பாளர் மற்றும் நடிகை அனிதா சம்பத் ஒருவர் மீது புகார் கூறி இருக்கும் தகவல் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமாகி பிரபலமான நடிகையாக இருப்பவர் அனிதா சம்பத். அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு கொண்ட அனிதா சம்பத், மக்களிடையே அதிகமாக பிரபலமானார்.இவர் எப்போதும் சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இருக்கிறார்.
மேலும் அவர், தான் அடிக்கடி எடுக்கும் புகைப்படம், வீடியோக்களை எல்லாம் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். இதனாலே இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். தற்போது youtube சேனல் நடத்தி வரும் அனிதா சம்பத் டிராவல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதோட பெண்களுக்கான குரூப் 2 ஏற்பாடுகளையும் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் எக்கச்சக்கமான பிரமோஷன் நிகழ்ச்சிகளிலும் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வருகிறார்.
அனிதா சம்பத் புகார்:
இந்நிலையில், தற்போது அனிதா சம்பத் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் போட்டிருக்கும் பதிவுகள் தான் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதில், ‘காசுக்காக மைனர் பெண்களை வைத்து பிசினஸ் பண்றவன், என்னுடைய கமெண்ட் செக்ஷனில் கமெண்ட் செய்து வருகிறான். அவனை உங்களுக்கு தெரிந்தால் அவனிடம் ஜாக்கிரதியாக இருங்கள்’ என்று ஒருவரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும், அனிதா சம்பத்தின் இன்ஸ்டாகிராமில் ஒருவர் தகாத வீடியோக்கள் Chatல் அனுப்பி வருகிறாராம்.
தகாத வீடியோக்கள்:
அவரின் புகைப்படத்தையும் வெளியிட்டு, அந்த இன்ஸ்டா ஐடியை அனைவரும் ரிப்போர்ட் செய்யுமாறு பதிவிட்டுள்ளார். அனிதா சம்பத் அவர்கள் இது போல் சமூக பிரச்சனைகளுக்கு கொடுப்பது இது முதல் தடவை கிடையாது. சமீபத்தில் கூட நடிகை அனிதா சம்பத் அவர்கள் ஆன்லைனில் ஒரு பொருளை ஆர்டர் செய்திருந்தார். அந்த பார்சலைப் பிரித்து பார்த்த உடனே இவருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. காரணம், இவர் அழகான புடவை ஒன்றை ஆர்டர் செய்திருந்தார். ஆனால், இவருக்கு வந்தது பழைய ரேஷன் புடவை மாதிரி மோசமாக இருக்கும் அழுக்கு சேலையை போல அந்த புடவை இருந்திருக்கிறது.
அனிதா சம்பத் எழுப்பிய கேள்விகள்:
இதை தான் அனிதா சம்பத் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தன்னுடைய ஆதங்கத்தை வெளியிட்டு இருந்தார். மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தை சார்ந்த மாங்காடு பக்கத்தில் உள்ள கொழுமணிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட குளத்திற்கு நடைபாதை படிக்கட்டு போட்டு இருக்கிறார்கள். இந்த மேம்பாட்டு பணிக்காக 11.36 லட்சம் இந்த செய்யப்பட்டதாக அங்கு உள்ள ஒரு சுவற்றில் எழுதப்பட்டிருக்கிறது. இதை அனிதா சம்பத் குறிப்பிட்டு, இந்த படிக்கட்டுகளை கட்டுவதற்காக 11 லட்சமா? 12 லட்சத்தில் முழு வீடே கட்டலாமே என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
பவித்ரா சீரியல்:
தற்போது, அனிதா சம்பத் கலைஞர் டிவியில் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் பவித்ரா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் அனிதா சம்பத்தோடு பாடல் ஆசிரியர் சினேகன் மற்றும் நடிகை கீதா முக்கிய கதாபாத்திரங்களில் விடுகிறார்கள். கடந்த நவம்பர் 4 ஆம் தேதி இருந்து ஒளிபரப்பாகும் இந்த சீரியல் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.