விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் இடம்பெற்றிருக்கும் அஞ்சலையம்மாள் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். கடந்த பிப்ரவரி மாதம் தான் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று தன் கட்சியின் பெயரை விஜய் அறிவித்திருந்தார். அதோடு சில மாதங்களுக்கு முன் பனையூரில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் விஜய், கட்சி கொடியை ஏற்றி அறிமுகம் செய்திருந்தார்.

விஜய் தன்னுடைய கட்சி கொடி ஏற்றுவதற்கு முன் உறுதிமொழி எடுத்து, கட்சிக்கான பாடலையும் பாடி, கொடியை ஏற்றி இருந்தார். அந்தக் கொடியில் வாகை மலரும், இரு பக்கம் யானை படமும் இடம்பெற்று இருக்கிறது. அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் தனது முதல் அரசியல் மாநாட்டை நடத்த தலைவர் விஜய் திட்டமிட்டு இருந்தார். முறையான அனுமதி பெற்று மாநாடு நடத்த ஏற்பாடு செய்து இருக்கிறார்கள்.
விஜய் மாநாடு:
பின் விஜய், அக்கட்சியின் முதல் மாநாடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை அறிவித்திருந்தார். அதில், நமது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வருகின்ற அக்டோபர் மாதம் 27ஆம் தேதி மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், விக்ரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெறும் என்பதை அறிவித்திருந்தார். தற்போது மாநாட்டிற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தான் த.வெ.க. மாநாட்டின் பந்தக்கால் நடும் விழா நடைபெற்று இருந்தது.

தவெக முதல் மாநாடு குறித்த தகவல்:
சுமார் 50,000 பேர் உட்காரும் இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கிறது. மேடை முழுவதையும் தலைவர் விஜய் சுற்றி பார்க்கும் வகையில் பாதையும் அமைக்கப்பட்டு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் பார்க்கிங், மருத்துவ வசதி, சிசிடிவி கண்காணிப்பு என மாநாட்டுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டும் இல்லாமல் இந்திய நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களின் கட் டவுட்களும் இந்த மாநாட்டில் இடம்பெற்றிருக்கின்றது.

அஞ்சலையம்மாள் குறித்த தகவல்:
அந்த வகையில் வீர தமிழச்சி அஞ்சலையம்மாள் கட் டவுட் வைக்கப்பட்டிருக்கிறது. தற்போது இதுதான் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்து வருகிறது. நம் நாட்டின் சுதந்திரத்திற்காக ஆங்கிலேயரிடம் அடிமையாகி பல கொடுமைகளை நம் நாட்டு பெண்கள் அனுபவித்திருக்கிறார்கள். இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட பெண்களில் அஞ்சலையம்மாளும் ஒருவர். இவர் கடலூரை சேர்ந்தவர். இவர் 1890 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஐந்தாம் வகுப்பு வரை தான் படித்தார். பின் நாட்டின் மீது கொண்டப்பற்றின் காரணமாக இவர் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட ஆரம்பித்தார்.

மாநாட்டில் இருக்கும் கட் டவுட்:
மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இவர் தன்னை இணைத்துக் கொண்டு சுதந்திரத்திற்காக போராடினார். பின் சிப்பாய் கலகத்தில் இறந்தவர்களுக்காக போராடிய போராட்டத்தில் அஞ்சலையம்மாள் தன்னுடைய ஒன்பது வயது மகளுடன் கலந்து கொண்டு இருந்தார். இதனால் இவர் தன்னுடைய மகளுடன் சிறைக்கு சென்றிருந்தார். ஒரு முறை இவர் நிறைமாத கர்ப்பிணியாக சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதையும் அனுபவித்தார். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு மூன்று முறை இவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்படிப்பட்ட வீர தமிழச்சியின் உடைய கட் டவுட் தான் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் இடம்பெற்று இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் மாநாட்டில் பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலு நாச்சியார் ஆகியோருடைய புகைப்படங்களும் இடம் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.






