ஜெய் காதலால் தான் சினிமா வாழ்க்கை பாழாய் போனதா ? முதன் முறையாக மனம் திறந்த அஞ்சலி.

0
849
anjlai
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அஞ்சலி. இவர் சினிமா உலகிற்கு வருவதற்கு முன்பே விளம்பர படங்களில் தான் நடித்துக் கொண்டிருந்தார். அதற்கு பிறகு தான் இவருக்கு 2007 ஆம் ஆண்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளி வந்த கற்றது தமிழ் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் இவர் மிக சிறப்பாக நடித்திருந்தார். மேலும், நடிகை அஞ்சலி முதல் படத்திலேயே மக்கள் மனதில் பிரபலமானார் என்று சொல்லலாம்.

-விளம்பரம்-

நடிகை அஞ்சலி கொடுக்கும் கதாபாத்திரங்களில் திறமையாக நடிக்க கூடியவர்.அதற்கு பிறகு 2010 ஆம் ஆண்டு அங்காடி தெரு என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் இவருடைய சினிமா உலகிற்கு தூக்கி விட்டது என்று சொல்லலாம். அதற்கு பிறகு தொடர்ந்து இவர் எங்கேயும் எப்போதும், கலகலப்பு, மங்காத்தா, ரெட்டைசுழி, சேட்டை, வத்திக்குச்சி, இறைவி, மாப்பிள்ளை சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.

- Advertisement -

இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்து உள்ளார். சமீப காலமாகவே நடிகை அஞ்சலிக்கும், நடிகர் ஜெய்க்கும் இடையே காதல் இருக்கிறது என்று பல கிசுகிசுக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. அதற்கு ஏற்றார் போல ‘பலூன்’ படம் தயாரிப்பாளர் நந்தகுமார் ஒரு பேட்டியின் போது அஞ்சலியிடம் படத்தின் சீன்களை சொல்லும் போது அவர்களுடைய பெயரை சொல்லிக் கூப்பிட்டார் இயக்குநர் சினிஷ் விட்டார்.

உடனே ஜெய்க்கு பயங்கர கோபம் வந்து நீங்கள் எப்படி அவர்களை பெயரை சொல்லி கூப்பிடலாம், ‘மேடம்’ என்று கூப்பிடுங்கள் என்று கண்டபடி சத்தம் போட்டு இருந்தார். பின்னர் அடுத்த நாளே இவர்கள் இருவரும் எதுவும் சொல்லாமல் சென்றுவிட்டார்கள். பின் எப்படியோ ஜெய்யும், அஞ்சலியும் வைத்து படத்தை ஒரு வழியாக முடித்து வெளியே விடப்பட்டது என்று கூறி இருந்தார் தயாரிப்பாளர் நந்தகுமார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அஞ்சலியிடம் ஜெய்யுடன் ஏற்பட்ட கிசு கிசு குறித்தும், அவரால் தான் சினிமா வாழ்க்கை பாழாய் போனது என்ற விமர்சனம் குறித்தும் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த அஞ்சலி ‘நான் காதலிக்கிறேன் என்று எப்போதும் சொன்னது கிடையாது. எனக்கு சினிமாவில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். எனவே, என்னைப் பற்றி எழுதுபவர்கள் யாரை வைத்து எழுத வேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்து விடுவார்கள். ஆனால், அதைப் பற்றி நான் பேசியதும் இல்லை பேசப் போவதும் இல்லை இது போன்ற விஷயத்தை நான் செய்யவில்லை எனவே அதைப் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

தற்போது அஞ்சலி ‘Fall’ என்ற வெப் தொடரில் நடித்து இருக்கிறார். இதில் எஸ்பிபி சரண், சோனியா அகர்வால், சந்தோஷ் பிரதாப், நமிதா கிருஷ்ணமூர்த்தி, தலைவாசல் விஜய், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள்.தற்கொலை முயற்சிக்கு பின் 24 மணி நேரம் நினைவில்லாத ஒரு இளம் பெண்ணின் கதையை மையப்படுத்தி இந்த ஃபால் தொடர் உருவாக்கப்பட்டு இருக்கிறது. சித்தார்த் ராமசாமி தான் இந்த ஃபால் தொடருக்கு ஒளிப்பதிவு செய்து இயக்கி இருக்கிறார். அஜேஷ் இசையமைத்திருக்கிறார். கிஷன் சி செழியன் படத்தொகுப்பை கையாண்டு இருக்கிறார்.

Advertisement