அறுவை சிகிச்சையில் குழந்தை பெற்ற தேன்மொழி சீரியல் நடிகை – live வீடியோவை வெளியிட்ட கணவர்.

0
1211
Thenmozhi
- Advertisement -

தொலைக்காட்சி என்ற ஒன்று தொடங்கிய காலத்திலிருந்து சீரியல்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. ஆரம்பத்தில் சீரியல்கள் குடும்ப இல்லத்தரசிகளின் பேவரட்டாக இருந்தாலும் கொரோனா தொடங்கிய காலத்திலிருந்து சீரியல்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி பார்க்கும் ஒன்றாக இருக்கிறது. தற்போதெல்லாம் மக்கள் வெள்ளித்திரைக்கு சென்று படங்களை பார்ப்பதை விட சின்னத்திரை சீரியல்களில் தான் விரும்பி பார்த்து வருகிறார்கள். இதனால் ஒவ்வொரு சேனலும் போட்டி போட்டுக்கொண்டு புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறார்கள். அதனால் சீரியல்கள் மட்டும் இல்லாமல் சீரியலில் நடிக்கும் நடிகர்களும் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் சின்னத்திரையின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக விளங்கி வருபவர் அஞ்சலி. இவர் சென்னையை சேர்ந்தவர். பி.காம் முடித்து விட்டு மீடியாவிற்குள் நுழைந்தார். சன் லைப்பில் ஒளிபரப்பான மசாலா கபே என்ற நிகழ்ச்சியில் தான் இவர் முதன்முதலாக காமெடி கான்செப்ட் பண்ணினார். அங்கு தான் இவர் முதன் முதலாக தன்னுடைய கணவர் பிரபாகரனை சந்தித்தார். ஆரம்பத்தில் இருவரும் நண்பனாக பேச ஆரம்பித்தார்கள். பின் இவர்களின் நட்பு காதலாக மாறியது. இருவருக்கும் சிறு வயது என்றாலும் திருமணம் செய்துகொள்ளும் தகுதி இருந்ததால் பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி இவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள்.

இதையும் பாருங்க ; நயன்தாராவால் குழந்தை பெற்று கொள்ள முடியாது, அதுக்கு காரணம் இதான் – பயில்வான் ரங்கநாதனின் சர்ச்சை வீடியோ

- Advertisement -

அஞ்சலி-பிரபாகரன் சின்னத்திரை பயணம்:

அதற்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் இருவருமே கலந்து கொண்டிருந்தார்கள். இந்த நிகழ்ச்சியின் மூலம் இவர்கள் மக்கள் மத்தியில் பரிச்சயமானார்கள். அதனைத் தொடர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் இருவரும் பங்கு பெற்று இருந்தார்கள். அதற்கு பிறகு தான் அஞ்சலிக்கு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த தேன்மொழி பிஏ பி எல் என்ற தொடரில் பள்ளி மாணவியாக, துருதுருவென சுட்டித்தனம் செய்யும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த சீரியல் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. பின் அஞ்சலி திடீரென்று சீரியலில் இருந்து விலகிவிட்டார்.

அஞ்சலி சீரியலில் விலகிய காரணம்:

இது குறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி எழுந்த நிலையில் சீரியலில் இவருடைய கதாபாத்திரம் கொஞ்சம் வித்தியாசமாக எடுத்துக் கொண்டு போவதாலும், அதற்கு இவர் செட்டாக மாட்டார் என்றும், இவருக்கு பதில் வேறு ஒரு நடிகையை கமிட் பண்ணி இருந்தார்கள். இதனால் தான் இவர் சீரியலில் இருந்து விலகி விட்டார் என்று கூறப்பட்டது. பின் இவர் போட்டோ ஷூட், நிகழ்ச்சி என்று இருந்தார். சமீபத்தில் அஞ்சலி கர்ப்பமாக இருக்கும் தகவலை இருவருமே சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருந்தார்கள். இந்த நிலையில் அஞ்சலி- பிரபாகரன் குறித்த வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால்,

-விளம்பரம்-

அஞ்சலியின் லைவ் டெலிவரி வீடியோ:

அஞ்சலியின் லைவ் டெலிவரி வீடியோவை தான் பிரபாகரன் சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார். அதில், அஞ்சலி கர்ப்பமாக இருப்பது எல்லோருக்குமே தெரியும். இவருக்க குழந்தை எப்போது பிறக்கும் என்று பலரும் ஆவலுடன் கேட்டிருந்தார்கள். சுகப்பிரசவம் ஆக வேண்டுமென்று அஞ்சலி உணவு முறை, உடற்பயிற்சி என அனைத்தையும் செய்து இருந்தார். பின் பிரசவ நேரத்தை நெருங்கும்போது பனிக்குடம் உடைந்து குழந்தை கை மட்டும் வெளியில் வந்ததால் சுகப்பிரசவத்திற்கு வாய்ப்பில்லை என்று அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். பின் கனத்த மனதோடு பிரபாகரனும் சரிவு அறுவை சிகிச்சை பண்ணுங்கள் என்று ஒத்துக் கொண்டார்.

அஞ்சலி-பிரபாகரனுக்கு பிறந்த குழந்தை:

மேலும், ஆப்ரேஷன் பிறகு அஞ்சலி, பிரபாகரனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை கையில் எடுத்த புகைப்படத்தை பிரபாகரன் சந்தோஷத்தில் பகிர்ந்திருக்கிறார். பின் பிரசவத்தின்போது அஞ்சலி பட்ட கஷ்டங்களையும் வேதனைகளையும் பதிவிட்டிருக்கிறார். அதில் அவர், கடவுளை எல்லோரும் ஒரு சில தருணங்களில் மனிதர்கள் மூலம் பார்ப்பார்கள் என்று சொல்வார்கள். அந்த வகையில் நானும் மருத்துவர்கள் மூலம் கடவுளை பார்க்கிறேன். எனக்காக ஒரு புது உறவை கொடுப்பதற்கு அஞ்சலி மிகவும் கஷ்டப்பட்டு விட்டாள். இதை நினைக்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்று ரொம்ப எமோஷனலாக பிரபாகரன் பதிவிட்டிருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் பிரபாகரனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement