பூவே உனக்காக படத்தில் நடித்த அஞ்சு அரவிந்த் தற்போதைய நிலை – விபரம் உள்ளே

0
2086
anju

தளபதி விஜய் தனது ஆரம்ப காலத்தில், தொடர்ந்து 6 படங்கள் தோல்வி கொடுத்தார். அதன் பின்னர் வந்தது தான் பூவே உனக்காக. இந்த படம் தான் விஜய்க்கு முதல் ஹிட் படம். இந்த படத்தில் விஜய் ஒரு பெண்ணை காதலிப்பார், அந்த பெண் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு போய் விடுவார். அந்த பெண் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் தெரியுமா.

anju2

அவர் பெயர் அஞ்சு அரவிந்த், இவர் கேரளாவில் 1978ஆம் ஆண்டு பிறந்தவர். வேனல் கனவு எனற மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பின்னர் தான் தமிழில் பூவே உனக்காக படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

அதன் பின்னர் தமிழில் அருணாச்சலம், ஒன்ஸ்மோர், எனக்கொரு மகன் பிறப்பான், உள்ளிட்ட படங்ளில் நடித்தார். பின்னர் திடீரென தனது 24 வயதில் 2002ஆம் ஆண்டு தனக்கு மாமன் முறையாகும் உறவினர் தேவராஜ் என்பவருடன் திருமணம் செய்து கொண்டார்.

anju3

ஆனால் இரண்டே ஆண்டுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றனர். அதன் பின்னர் மீண்டும் படங்களில் அடிக்க ஆரம்பித்தார் அஞ்சு அரவிந்த். அதன் பின்னர் மீண்டும் 2006ஆம் ஆண்டு பெங்களூரை சேர்ந்த தொழில் அதிபர் சந்திரன் என்பவருடன் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இருந்தும் தொடர்ந்து படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்தார். தற்போது இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.பெரும்பாலும் மலையாளப் படங்களில் மட்டும் நடித்த அஞ்சு 35 சீரியலில் நடித்துள்ளார். தற்போது தமிழில் அழகிய தமிழ் மகள் என்ற சீரியலில் நடித்து வருகிறார்.