ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று 'அண்ணா'. தன் தங்கைகளுக்காக போராடும் அண்ணனின் கதை தான் இந்த சீரியல். இந்த வாரம், சண்முகம் மீது இருக்கும் கோவத்தால், இசக்கி மீது சௌந்தரபாண்டி மண்ணெண்ணையை ஊற்றிக் கொளுத்தப் போனார். கடைசியில் பாக்கியம், சௌந்தரபாண்டி மற்றும் அவரது அக்கா பாண்டியம்மாவை லெப்ட் ரைட் வாங்குகிறார். அதனால் அவர்கள் இருவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். பின் இசக்கி பாக்கியத்திடம் இனிமேல் இந்த வீட்டில் இருக்க வேண்டாம் என்று சொல்ல, பாக்கியம் அவருக்கு ஆறுதலாக பேசுகிறார்.

அதைத்தொடர்ந்து வெங்கடேஷ் ரத்னாவிடம் ஸ்கூலை தனது குழந்தைக்கு எழுதிக் கொடுக்க சொல்கிறார். அதற்கு ரத்னா மறுக்க, வீட்டை விட்டு துரத்தி விடுவேன் என்று மிரட்டுகிறார். இன்னொரு பக்கம், சிவபாலன் அக்காவுக்கு விஷயத்தை சொல்லிவிடலாம் என சொல்ல, பாக்கியம் மறுக்கிறார். அதன்பின் பரணி, சண்முகத்திடம் போட்டியில் ஜெயிக்கணும்னா என் அப்பாவோட வேட்டியை உருவனா மட்டும் போதாது என்று நெருங்க, நான் கந்த சஷ்டி விரதம் என சண்முகம் தள்ளி போகிறார்.
அண்ணா சீரியல்:
பின், உன்னை எப்படி வழிக்கு கொண்டு வரேன்னு பாரு என்று பரணி சபதம் எடுக்க, மறுநாள் காலையில் ஷண்முகத்தை கட்டிப்பிடித்தபடி கீழே படுத்து இருக்கிறார். பின் நேற்றுய எபிசோடில், பரணி வேண்டுமென்றே சண்முகத்தை உசுப்பேற்றுவது போல் நடந்து கொள்கிறார். இதனால் சண்முகம் தனது சஷ்டி விரதத்தில் கவனம் செலுத்த முடியாமல் தவிக்கிறார். இதையடுத்து இசக்கியிடமிருந்து 4 மிஸ்டு கால் வந்து இருக்க, சண்முகம் பதறிப் போய் அவருக்கு போன் செய்கிறார். பின் இசக்கி தனக்கு நடந்த கொடுமையை சொல்ல, சௌந்தரபாண்டியன் வீட்டுக்கு சண்முகம் ஆவேசமாக கிளம்புகிறார்.

நேற்றைய எபிசொட்:
பின் இசக்கியிடம் தன்னுடன் வீட்டுக்கு வந்துவிடு என்று சண்முகம் அழைக்க, உன் தங்கச்சி வாழா வெட்டியாகி விடுவாள் என சௌந்தர பாண்டியன் நக்கல் அடிக்கிறார். பின் சண்முகம் கோவத்தோடு கிளம்பி அங்கிருந்து வீட்டுக்கு வந்ததும், வைகுண்டம், ஏன்டா இசக்கியை விட்டுட்டு வந்த என கோபப்பட்டு கேட்கிறார். உடனே பரணி, அவன் சரியாகத் தான் செய்திருக்கிறான், ஏன் அவனை ஏத்தி விடுறீங்க என்று சொல்ல, சண்முகம் அமைதியாக நிற்கிறார்.
இன்றைய எபிசொட்:
இந்நிலையில் இன்றைய எபிசோடில், சண்முகம் சௌந்தர பாண்டிக்கு எதிராக பஞ்சாயத்தை கூட்டுகிறார். அங்க இருக்கும் பெரியவர்களிடம், சௌந்தரபாண்டி ஏற்கனவே என் தங்கச்சியை நிறைய கொடுமை செய்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் நேற்று மண்ணெண்ணையை ஊற்றி கொழுத்த போனார். அதற்கு அவருடைய அக்கா பாண்டியம்மாவும் துணை போயிருக்கிறார். அவங்க வீட்ல இருக்கவங்க எல்லாம் காப்பாற்ற முடியாமல் நின்று இருக்கிறார்கள். அதனால், இவ்வளவு கொடுமைகளோடு என் தங்கச்சி அந்த வீட்டில் இருக்கக் கூடாது, பெரியவர்கள் பேசி என் தங்கச்சியை வீட்டுக்கு அனுப்பி வையுங்கள் என்று சொல்கிறார்.
https://www.youtube.com/watch?v=xzSsGmNWYcM
சீரியல் ட்ராக்:
அதற்கு, பாக்கியம் இசக்கியிடம் நீ உங்க வீட்டுக்கு போய் விடாதே. நீ போய்ட்டா நான் பாண்டிக்கு என்ன பதில் சொல்வேன் என்று அழுகிறார். பின் சண்முகம், உன் உசுரு தான் எங்களுக்கு ரொம்ப முக்கியம். எதுவும் வேண்டாம் என்று தூக்கி போட்டுட்டு வா என்று இசக்கியிடம் சொல்கிறார். அதோடு, எங்க வாழ வேண்டும் என்று ஒரு ஆணுக்கு எப்படி உரிமை இருக்கோ, அதே மாதிரி பெண்ணுக்கும் இருக்கிறது. நீ வா அண்ணன் பார்த்துக்கொள்கிறேன் என்று இசக்கியிடம் சண்முகம் சொல்கிறார். இசக்கி ஒன்றும் புரியாமல் அப்படியே நிற்கிறார். இத்துடன் சிறையில் முடிகிறது.






