‘அண்ணாத்த ‘ – முழு விமர்சனம் இதோ (நல்ல வேல தல தப்பிச்சது)

0
1148
Annaatthe
- Advertisement -

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அண்ணாத்த’ திரைப்படம் தீபாவளி திருநாளான இன்று வெளியாகி இருக்கிறது. ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சதீஷ், ஜார்ஜ் மரியான், அபிமன்யு சிங், சத்யன், ரெடின் கிங்ஸ்லி, ஜகபதிபாபு, லிவிங்ஸ்டன், பாண்டியராஜன் என்று ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படத்திற்கு தேசிய விருது வென்ற இமான் இசையமைத்து உள்ளார். இந்த படத்தை பற்றிய முழு விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

-விளம்பரம்-
Rajinikanth's Annatha – Is this reason behind title? - Rajinikanth-  Superstar- Superstar Rajinikanth- Rajini- Thalaivar 168- Siruthai Siva-  Keerthy Suresh- Nayanthara- D Imman- Kamal Haasan- Rajinikanth Political  Entry | Thandoratimes.com |

கதைகளம் :

- Advertisement -

தஞ்சாவூருக்கு அருகிலிருக்கும் சூரக்கோட்டையைச் சேர்ந்த காளையனாக ரஜினிகாந்த், அவருடைய தங்கை தங்க மீனாட்சியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்கள். ஊர்தலைவரான ரஜினிக்கு அந்த ஊரில் படு செல்வாக்கு இருக்கிறது. அதே போல ரஜினி, தன் தங்கை மீது உயிரையே வைத்துள்ளார். ரஜினியின் முறைப்பெண்ணாக மீனா மற்றும் குஷ்பு நடித்து இருக்கிறார்கள். இவர்கள் இருவரையும் ரஜினி திருமணம் செய்து கொள்ளாததால் குடும்ப உறவு நீடிக்க தங்கள் தம்பிகளில் ஒருவரை யாரையாவது ரஜினி என் தங்கைக்கு திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.

ஆனால், ரஜினி தன்னுடைய தங்கைக்கு எப்படிப்பட்ட மாப்பிள்ளை வரவேண்டும் என்று சொன்னதுமே இருவருமே திருமண ஆசையை விட்டு விடுவார்கள். இப்படி ஒரு நிலையில் ரஜினி அடிக்கடி சண்டை போடும் பிரகாஷ்ராஜ் மகனுக்கே கட்டி வைக்க முடிவு செய்வார். இந்த நிலையில் திருமணத்திற்கு ஒரு நாள் முன்னர் ரஜினியின் தங்கையான கீர்த்தி சுரேஷ் வீட்டை விட்டு தன் காதலனுடன் ஓடி விடுவார். ரஜினியின் தங்கை மீது இருக்கும் பாசத்தினால் கீர்த்தி சுரேஷ் அவரது காதல் உடனே அனுப்பி வைத்து விடுவார்.

-விளம்பரம்-

தன் காதலரை திருமணம் செய்துகொண்டு கல்கத்தாவில் கீர்த்தி சுரேஷ் வாழ்ந்து வருவார். இப்படி ஒரு நிலையில் அவரது கணவரின் கம்பெனிகளை கொல்கத்தாவில் உள்ள மிகப் பெரிய தாதா மிரட்டி எழுதி வாங்கி கொள்வதோடு கீர்த்தி சுரேஷ் செய்யும் அடிக்கடி தொல்லை செய்து கொண்டிருப்பார். ‘இந்த பிரச்சனையை உன் அண்ணனிடம் சொல்லி விடு’ என்று கூறும்போது நான் மீண்டும் ஒரு நல்ல நிலைக்கு வந்த பின்னர் தான் என் அண்ணனை பார்ப்பேன் என்று சபதம் போடுவார் கீர்த்தி சுரேஷ்.

ஆனால், தன்னுடைய தங்கை பிரச்சனையில் இருப்பதை அறிந்து கொல்கத்தாவுக்கு செல்லும் ரஜினி, நயன்தாராவை தன் தங்கையுடன் தங்க வைத்துவிடுவார். பின்னர் கீர்த்தி சுரேஷ்க்கே தெரியாமல் அவரை அடுத்தடுத்து பிரச்சினைகளில் இருந்து காப்பாற்றி வருவார். இறுதியில் கீர்த்தி சுரேஷின் பிரச்சினை தீர்ந்ததா, இவ்ளோ பாசம் வைத்த அண்ணனை விட்டு அவர் ஏன் வீட்டை விட்டு வெளியேறினார். வில்லனை ரஜினி என்ன செய்தார் என்பதே இந்த படத்தின் கதை.

பிளஸ் :

படத்தின் முதல் பாடல் மற்றும் ரஜினியின் Bgm

முதல் பாதியில் ரஜினியை கொஞ்சம் ஜாலியான ரோலில் காட்டி இருக்கின்றனர்.

ரஜினி – நயன்தாரா ரொமான்ஸ் காட்சிகள் இல்லாமல் இருந்தது நல்லது.

மைனஸ் :

படத்தில் ரஜினி இளமையாக தெரிந்தாலும், ரஜினியின் குரல் மற்றும் ஆக்ஷனில் பழைய ரஜினியிசம் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள தான் வேண்டும்.

அண்ணாத்த பாடலை தவிர மற்ற பாடல்கள் ரசிக்கும்படியில்லை.

விஸ்வாசம் படத்தில் வந்த கண்ணான கண்ணே பாடலை போல இதிலும் ட்ரை செய்துள்ள இமான் அந்த முயற்சியில் தோற்றுவிட்டார்.

படத்தில் எப்போ பார்த்தாலும் பாசத்தை பற்றிய பஞ்சுகள் தான் அதிகம் வருகிறது. ரஜினியின் ட்ரேட் மார்க் பஞ்ச் டைலாக்குகள் மிஸ்ஸிங்

சூரியின் காமெடி படத்தில் எடுபடவில்லை. மாறாக கிங்ஸ்லியை அதிகம் பயன்படுத்தி இருக்கலாம்.

மீனா குஷ்பூ நயன்தாரா இவர்களின் கதாபாத்திரம் பெரிய அழுத்ததை கொடுக்கவில்லை.

இரண்டு வில்லன்கள் இருந்தும் அவர்களின் வில்லத்தனம் படத்தில் சுத்தமாக எடுபடவில்லை.

இறுதி அலசல் :

சிறுத்தை சிவா என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது தல மற்றும் பாச கதைகள் தான். இதுவரை சிறுத்தை சிவா இயக்கிய வீரம், விசுவாசம், வேதாளம், விவேகம் போன்ற பல்வேறு படங்கள் பாசத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு இருந்தது. இந்த அனைத்து படத்தில் இருந்தும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து மிக்சிங் செய்து பாச மழையை பொழிந்து இருக்கிறார் சிறுத்தை சிவா.

சமீபகாலமாக தமிழ் சினிமாவில் விவசாயத்தை மையமாக வைத்து பல்வேறு திரைப்படங்களில் எடுக்கப்பட்டு வந்தது. இதனால் ரசிகர்களே ‘விவசாயத்தை தமிழ் சினிமாவில் இருந்து காப்பாற்றுங்கள்’ என்று கூறி வந்தனர். அந்த வகையில் அன்பையும் பாசத்தையும் சிறுத்தை சிவாவிடம் இருந்து யாராவது காப்பாற்ற வேண்டும். இருந்தாலும் ‘தல’ தப்பிச்சது என்று தான் சொல்ல வேண்டும். மொத்தத்தில் அண்ணாத்த திரைப்படம் ரஜினி ரசிகர்களுக்கு மட்டும் அல்ல ஒரு சாதாரண ரசிகனுக்கு கூட மிகப் பெரிய ஏமாற்றம்தான்

Advertisement