“சீமானின் சவாலை நான் ஏற்று கொள்கிறேன். அவரை கூறியதை விட அதிக அளவில் வாக்கு வாங்கி கட்டுகிறேன்”- அண்ணாமலை அதிரடி.

0
523
- Advertisement -

சீமானை விட தான் ஒரு சதவிகதம் இல்லை 30% வாக்குகளை அதிகம் பெற்று கட்டுகிறேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சீமானின் சவாலை ஏற்றுக்கொண்டார். சீமான் கூறுகையில் மோடி தமிழ் நாட்டில் போட்டியிட்டால் அவருக்கு எதிராக நான் போட்டியிடுகிறேன் என்று கூறினார். அதற்க்கு கருத்து தெரிவித்த அண்ணாமலை அவர் எங்கு வேண்டுமாலும் போட்டியிட்டும் அவர் வெற்றி பெற போவதில்லை என்று கூற அது இருவருக்கும் இடையில் வாக்குவாதமானது.

-விளம்பரம்-

சீமான் VS அண்ணாமலை:

சீமான் கூறுகையில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் நாட்டில் ராமநாதபுரத்தில்? மோடி போட்டியிட்டால் அவருக்கு எதிராக நான் போட்டியிடுகிறேன் என்று கூறியிருந்தார். அதற்க்கு அண்ணாமலை சீமான் அண்ணன் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடட்டும் அவர் எங்கு நின்றாலும் வெற்றி பெற போவதில்லை என்றும் பாவம் அவர் வாய் இருக்கிறது என்று ஏதோ பேசிக்கொண்டு இருக்கிறார்.

- Advertisement -

அதாவது எந்த ஊருக்கு போறோம் னு தெரிஞ்சு பயணம் செய்பவர்களுக்கு தான் அது கஷ்டம். எந்த ஊருக்கு போறோம் என்று தெரியாமல் எதாவது ஒரு பாதையில் பயணம் செய்பவர்களுக்கு எந்த ஒரு கஷ்டமும் இல்லை. அது போல தான் சீமான் அண்ணன் எங்கு நின்றாலும் தோர்க்க தான் போகிறார். அவர் மோடியை எதிர்த்து வாரணாசியில் நின்றால் என்ன ராமநாதபுரத்தில் நின்றால் என்ன எங்கு நின்றாலும் தோற்கதான் போகிறார் என்று அண்ணாமலை கூறியிருந்தார்.         

சீமானின் பதில்:

சீமான் கூறுகையில் நான் எங்கு நின்றாலும் தோற்றது போவேன் அண்ணாமலை நின்றால் வெற்றி பெற்று விடுவாரா ? பாஜக 40 இடங்களில் நின்றால் வெற்றி வெற்றி பெற்று விடுமா? நான் சிங்கம் போல் தனியாக நிற்கிறேன் கூட்டணி இல்லாமல். என்னுடன் யார் வேண்டுமாலும் மோதிகொல்லுங்கள் என்று நிற்கிறேன். நீங்கள் அது போல் தனித்து போட்டியிடுவீர்களா? 10 ஆண்டுகள் நாட்டையே ஆண்டுவிட்டிர்களே நாட்டின் பெரிய கட்சி தானே வாருங்கள் தனியாக போட்டியிடுவோம் தமிழ் நாட்டில்.

-விளம்பரம்-

என்னை விட ஒரு 1%. ஒட்டு வாங்கி காட்டுங்கள். நீங்கள் நடையாக நடந்து எடப்பாடி விட்டிற்கு தான் செல்லுவீர்கள். எடப்பாடியின் முதுகுக்கு பின் தான் நிற்க போகிறிர்கள். நான் 40 இடங்களிலும் போட்டியிடுவேன் உங்களுக்கு 40இடங்களில் போட்டியிட வேட்பாளர் இருக்கிறார்களா? அதிகபட்சம் 7 அல்லது 8 இடங்களில் போட்டியிடுவிர்கள் அதற்கே எடப்பாடியிடம் நடையாக நடந்து செல்ல வேண்டும். பாஜகவிற்கு ஒதுக்கும் இடங்கள் அணைத்து வீண் தானே அது அவருக்கும் பின்னடைவை தரும் என்று கூறியிருந்தார்.

அண்ணாமலையின் பதில்:           

நான் சீமான் அண்ணனின் சவாலுக்கு தயார். 1 % இல்லை அவரை விட 30% அதிகமாக ஒட்டு வாங்கி காட்டுகிறேன். நாம் தமிழர் என்கிற கட்சி 2024 தேர்தலுக்கு பின் இருக்காது. இன்னும் எத்தனை நாட்களுக்கு வெறுப்பை வைத்து கட்சியை நடத்த முடியாது. நாம் தமிழர் கட்சி இளைஞசர்களிடம் வெறுப்பை விதைத்து வருகிறது.நாம் தமிழர் கட்சியினால் என்ன செய்ய முடியும் மத்தியில் ஆட்சியில் உள்ளார்களா? அல்லது மாநிலத்தில் ஆட்சியில் வர போகிறார்களா ?

அவர்களுடைய கொள்கைகள் என்ன ? தனி மனித அடிப்படையில் சீமான் அவர்களுடைய கருத்தக்கு நான் ஆதரவு தெரிவித்து வருகிறேன். ஆனால் தேர்தல் என்று வந்தால் மக்கள் அவ்வாறு பார்க்க மாட்டார்கள். இதன் சவாலை எங்களுடைய தொண்டனே ஏற்று கொள்வர் சவால்களுக்கு நான் தயாராக உள்ளேன். சீமான் அவர்களை யாரும் கூட்டணியில் இணைத்து கொள்ளவில்லை என்று தான் பார்க்க வேண்டும்.           

Advertisement