அமலாக்க துறையினரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட செந்தில் பாலாஜி. விசாரணை எத்தனை நாட்கள் தெரியுமா ?             

0
1157
- Advertisement -

அமைச்சர் செந்தில் பாலாஜியை வரும் ஆகஸ்ட் 12 தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்க துறைக்கு அனுமதியளித்து புழல் சிறையில் இருந்து எடுத்து விசாரிக்கவும் சென்னை முதன்மை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை முதன்மை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகலை புழல் சிறை அதிகாரிகளிடம் அளித்து அமைச்சர் செந்தில் பாலாஜியை பலத்த பாதுகாப்புடன் மூன்று கார்களில் அவரை ஏற்றி சென்று நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்க துறை அலுவகத்திற்கு அழைத்து சென்றனர். அவரிடம் 5 நாட்கள் விசாரணை நடைபெற்ற உள்ளது.

-விளம்பரம்-

அமைச்சரின் வழக்கு

சட்ட விரோத பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கதுறை கைது செய்த நிலையில் அவரை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு வெவ்வேறு தீர்ப்பினை வழங்க வழக்கு மூன்றாவது நீதிபதிகள் அமர்வுக்கு சென்றது. மூன்றாவது அமர்வு அவர் கைது செய்யப்பட்டது சட்டத்திற்கு உட்பட்டு தான் என்றும் அவர் குணமடைந்த பிறகே அவரை விசாரிக்கலாம் என்றும் தீர்ப்பு வழங்கின.

- Advertisement -

புழல் சிறையில் இருந்து அமைச்சர்

நேற்று இரவு 8 மணியளவில் புழல் சிறையில் இருந்து அமலாக்க துறையினரால் நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனிற்கு அவரை விசாரனைக்காக அவரை அழைத்து சென்றது. அவரிடம் நேற்று இரவு முதல் விசாரணை தொடங்கப்பட வில்லை என்றும் காலை முதல் தான் விசாரணை ஆரம்பித்தது தகவல்கள் தெறிவிக்கின்றன. மேலும் அவருக்கு இரண்டு முறை மருத்துவ பரிசோதனை நடத்த வேண்டும் எனவும் உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது.

இன்று காலையே மருத்துவ குழு வந்து அவரை பரிசோதித்து விட்டு சென்ற நிலையில் தற்போது விசாரணை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கின்றன. இன்று முதல் கட்டமாக 150 கேள்விகள் வரை கேட்க படும் என்றும் அமலாக்க துறையின் மூலம் தகவல்கள் கிடைக்கப்பெற்றன. இந்த வழக்கை பொறுத்தவரை பல்வேறு வெளிநாட்டு தொடர்பான பணப் பரிவர்த்தனை மற்றும் பல்வேறு ஆவணங்கள் குறித்தும் விசாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விசாரணையானதுஇன்று நாள் முழுவதும் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இன்று தொடங்க உள்ள விசாரணையானது இந்த மாதம் 12 தேதி வரை நடைபெற்ற உள்ளது.              

-விளம்பரம்-
Advertisement