என்ன அசிங்கம் ஆகிடும், தப்பாகிடும் பாத்துக்கோ – ஸ்டார் மியூசிக் பாபா பாஸ்கருக்கும் கனிக்கும் வெடித்த வாக்கு வாதம்.

0
2522
baba

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசன் ஒளிபரப்பாகி வந்தது. முதல் சீசனை விட இந்த சீசனுக்கு எக்கச்சக்க வரவேற்பு கிடைத்தது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஷோக்களில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்ட்டில் உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் குக் வித் கோமாளியின் பைனல் படப்பிடிப்பு நடந்து முடிந்து.இறுதி போட்டிக்கு பாபா பாஸ்கர், கனி, அஸ்வின், ஷகீலா, பவித்ரா ஆகிய 5 பேர் தகுதி பெற்று இருந்தனர். இந்த சீசனில் கனி முதல் இடத்தையும், ஷகீலா இரண்டாம் இடத்தையும், அஷ்வின் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். 6 மணி நேரம் நடைபெற்ற இறுதி போட்டியில் அணைத்து போட்டியாளர்களும் அணைத்து கோமாளிகளும் கலந்து கொண்டனர்.

இதையும் பாருங்க : 7 ஆண்டுக்கு முன் சோம் சேகருடன் டின்னர் சாப்பிட்டுள்ள ஜூலி – சோம் சேகர விடுங்க ஜூலி எப்படி இருந்துள்ளார் பாருங்க.

- Advertisement -

இந்த சீசனில் கோமாளிகளுக்கு இணையாக காமெடி செய்து வந்தவர் பாபா பாஸ்கர் தான். என்னதான் இவர் மூன்றாம் இடத்தை கூட பிடிக்கவில்லை என்றாலும், இவருக்கு சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது. பாபா பாஸ்கர் குக்கு வித் கோமாளியில் இருந்த வரை இவருக்கும் கணிக்கும் அடிக்கடி ஜாலியான சண்டைகள் வந்தது. சொல்லப்போனால் கனிக்கு, காரக் கொழம்பு கனி என்று பெயர் வைத்ததே பாபா பாஸ்கர் தான்.

இப்படி ஒரு நிலையில் குக்கு வித் கோமாளி பிரபலங்கள் சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் பாபா பாஸ்கரை கனி, ரொம்ப அசிங்கம் ஆகிடும் போங்க என்று கூற கடுப்பான பாபா பாஸ்கர் ரொம்ப தப்பா பேசுற, அசிங்கம் அப்படியெல்லாம் பேசுற அப்புறம் தப்பாகிடும் என்று டென்சன் ஆகியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement