அட்ஜஸ்ட் செய்ய மறுத்ததால் வாழ்க்கையை இழந்தேன்..!மேலும், ஒரு பாடகிக்கு காதல் வளை விரித்த வைரமுத்து..!

0
577
vairamuthu-issue

பாடகி சின்மயி பின்னணி பாடகி சின்மயி மற்றும் வைரமுத்து #metoo விவகாரம் தான் தமிழ் சினிமாவின் ஹாட் டாபிக்காக இருந்து வருகிறது. பாடகி சின்மயி, வைரமுத்து மீது குற்றச்சாட்டை வைத்த பின்னர் பல்வேறு பெண்கள் வைரமுத்து மீது குற்றச்சாட்டை பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்து வருகின்றனர்.

Bhuvana

இருப்பினும் ஒரு சில தரப்பினர் வைரமுத்து மீது வைத்த பாலியல் குற்றச்சாட்டுக்கு பாடகி சின்மயி முன்னுக்கு பின்னான கருத்துக்களை கூறிவருகிறார் என்று குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் மற்றுமொரு பெண் பாடகியான புவனா ஷேசன் என்பவர் வைரமுத்து மீது முகநூல் பக்கத்தில் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னணி பாடகியான புவனா ஷேசன் வைரமுத்துவால் 22 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். அதில் ஒரு விளம்பர பாடல் ஒன்றை பாட சென்னை ரங்கராஜபுரத்தில் உள்ள ஸ்டுடியோ ஒன்றுக்கு சென்றிருந்தேன். வைரமுத்து, உங்கள் குரல் இனிமையாக உள்ளது…பாடி முடித்துவிட்டு தன்னை பார்க்கும்படி என்னிடம் தொலைபேசி என்னை வாங்கினார்.

Bhuvanashesan

அதன் பின்னர் அடிக்கடி போனில் தொடர்பு கொண்ட வைரமுத்து, பல இசையமைப்பாளர்களிடம் எனக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக கூறியதுடன் உன் கண்கள் என்ன கூர்வாளா… என் கவிதையே துண்டு துண்டாகி உன் காலடியில் விழுந்து கிடக்கிறதே என எனக்கு காதல் வலை வீசினார். எனக்கு அவரது நோக்கம் புரிந்து விட்டது இருப்பினும் நான் புரியாதது போல நடித்தேன். அதன் பிறகு பல முறை என்னை தொடர்பு கொண்டு மலேஷியா வருகிறாயா என கேட்டு தொந்தரவு செய்தார்.

மேலும்,ட்ஜஸ்ட் பண்ணி நடந்துகிட்டா லைஃப்ல அழகாக செட்டில் ஆகிவிடலாம் என கவிஞர் வைரமுத்து ஆசை வார்த்தை காட்டினார். பின்னர் என்னை மிரட்டவும் செய்தார் அவர் கூறியது போலவே எனக்கு செல்லும் இடமெல்லாம் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் பாடகர் தொழிலை விட்டுவிட்டு நான் வேறு வேலைக்கு சென்று விட்டேன் என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.