எப்படி இருக்கிறது ப்ளூ சட்டை மாறனின் ‘ஆன்டி இந்தியன்’ – முழு விமர்சனம் இதோ.

0
2242
anti-indian
- Advertisement -

சினிமா உலகில் வெளிவரும் பல நடிகர்களின் படங்களை விமர்சிக்கும் யூடியூப் பிரபலம் ப்ளூ சட்டை மாறன். இவர் யாரையும் பாரபட்சம் பார்க்காமல் தாறுமாறாக வெளுத்து வாங்குவார். இப்படி ஒரு நிலையில் இவர் முதல் முதலாக படம் ஒன்றை இயக்கி நடித்து இருக்கிறார். மேலும், இவர் படத்தை வைத்து செய்வதற்கென்றே பல நடிகர்களும் இயக்குனர்களும், ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இவரின் ஆன்டி இண்டியன் படத்தின் முதல் பார்வை வெளியாகி இருக்கிறது. வாங்க போய் பார்க்கலாம். சீன் ஓப்பனிங்கில் அரசியல் கட்சிகளுக்கு சுவர் விளம்பரங்கள், ஓவியங்கள் வரைபடத்தில் நம்ம ஹீரோ மாறனுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறார்கள்.

-விளம்பரம்-
Anti Indian (2021) - IMDb

ஹீரோ மாறன் படத்தில் பாட்சா கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். மேலும், சில அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் அவர் கொலை செய்யப்படுகிறார். இந்து தாய்க்கும், முஸ்லிம் தந்தைக்கும் பிறப்பவர் தான் பாட்சா. பின் மாறன் உடலை பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்ய எடுத்துச் செல்கிறார்கள். ஆனால், பாட்ஷா உண்மையான முஸ்லிமாக வாழவில்லை என்று அவர் உடலை அடக்கம் செய்ய அனுமதிக்க முடியாது என்று முஸ்லிம் மதத்தினர் அவரது உடலை திருப்பி அனுப்புகிறார்கள்.

- Advertisement -

இதன் பிறகு வீட்டுக்கு திருப்பி எடுத்துச் செல்லப்பட்ட பாட்ஷாவின் உடலுக்கு இந்து முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டு இந்து மக்களின் உடல்களை அடக்கம் செய்யும் மயான பூமிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு இறந்தவரின் பெயர் பாட்ஷா என்பதால் அங்கும் அடக்கம் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது. இன்னொருபுறம் இடைத் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் பாட்சாவின் உடலை வைத்து அரசியல் செய்கிறார்கள். எல்லாத்தையும் தாண்டி பாட்ஷாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டதா? என்னென்ன கலவரம் நடந்தது? என்பதை தான் ஆண்டி இந்தியன் படம் சொல்கிறது.

Blue Sattai Maran's Anti-Indian gears up for trailer release! Tamil Movie,  Music Reviews and News

பல படங்களை குறை சொன்ன ப்ளூ சட்டை மாறன் இயக்கிய படம் மக்கள் மத்தியில் வெற்றி அடைந்ததா என்றால் கண்டிப்பாக இல்லை என்று சொல்லலாம். படத்தின் முதல் காட்சியிலேயே ப்ளூ சட்டை மாறன் இறந்தது போன்று காண்பிக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் படம் முழுவதும் ஒரே கான்செப்ட்டில் கதை சுற்றி சுற்றி நகர்கிறது. பின் பாட்சாவின் பின்னணியும் பெற்றோர்களுடைய பின்னணியும் கதை சொல்லாமலே மக்களுக்கு ஈசியாக புரிந்து கொள்ள முடிகிறது. இதற்கென்று பிளாஷ்பேக், எந்த ஒரு பின்னணிக் கதையும் தேவையில்லை. மேலும், படம் முழுக்க முழுக்க பாட்ஷாவின் மரணமும், அவருடைய உடல் அடக்கம் செய்ய ஏற்படும் சிக்கல்கள், தேர்தல் பிரச்சாரம், அரசியல் சாமர்த்தியம் என்று எதை நோக்கி செல்வதே தெரியாமல் வசனங்களும் காட்சிகளும் நகர்ந்துகொண்டிருக்கிறது.

-விளம்பரம்-

படத்தின் ஹீரோவான ப்ளூ சட்டை மாறன் படம் முழுக்க பிணமாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோல் முதல் பாதியில் இருந்த கொஞ்ச வேகம் இரண்டாம் பாதியில் சுத்தமாக இல்லை. முதல் பாதியில் கொஞ்சம் வசனங்கள், காட்சிகள் இருந்தாலும் பிற்பாதியில் கதையை எதை நோக்கி செல்கிறது? இது படம் தானா? என்று ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு இயக்கியிருக்கிறார் ப்ளூ சட்டை மாறன். அதேபோல் சில இடங்களில் வரும் காட்சிகள் எல்லாம் படத்திற்கு தேவையா? என்று சொல்லும் அளவிற்கு இருக்கிறது. கிளைமாக்ஸ் வரை திரைக்கதையை கொண்டு செல்ல இயக்குனர் பயங்கர போராடிருக்கிறார் என்பது நன்றாக தெரிகிறது.

Anti Indian Movie (2021): Watch Blue Sattai Maran's Anti Indian Movie on  Tamil Talkies - News Bugz

மேலும், மத அடிப்படைவாதிகள், காவல்துறை, அரசியல் கட்சிகள், மீடியா என யாரையும் விட்டுவைக்காமல் படத்தில் காண்பித்திருக்கிறார். அதேபோல் எல்லோரையுமே பாரபட்சம் பார்க்காமல் தோலுரித்துக் காட்டி இருக்கிறார். கதை தான் இப்படி என்றால் படத்தின் இசையும் கொஞ்சம் கவனித்து எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். 90 காலகட்டத்தில் சீரியல்களில் வந்த இசையை கேட்பது போலவே உணர்வு ஏற்படுகிறது என்று கூறுகிறார்கள். மேலும், ஆன்ட்டி இந்தியன் படம் எந்த மதத்தையும் தூக்கி வைத்து பெருமை படுத்தவில்லை, எந்த மதத்தையும் கீழே போட்டு மிதிக்க வில்லை. மதங்களுக்கிடையே உண்டாகும் சில பிரச்சனைகளையும், சலசலப்பையும் காட்டி இருக்கிறார் இயக்குனர். அதுமட்டுமில்லாமல் மதத்தால் சில அதிகார வர்க்கமும், அரசியல்வாதிகளும் செய்யும் அரசியல் சூழ்ச்சியை அப்பட்டமாக வெளிப்படுத்தி துணிவுடன் சொல்லியிருக்கிறார். படம் சூப்பரோ சூப்பர் என்று சொல்லும் அளவிற்கு இல்லை என்றாலும் ஓகே என்று சொல்லலாம்

Advertisement