பாசங்கள் நேசங்கள் எதுவுமின்றி வாழ்ந்திடும் வாழ்க்கையோ வாழ்க்கையில்லை – அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய அந்தோணி தாஸ்.

0
790
antony das
- Advertisement -

தன்னுடைய அம்மாவின் நீண்ட நாள் ஆசையை பாடகர் அந்தோணி தாசன் நிறைவேற்றி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான பாடகராக திகழ்பவர் அந்தோணி தாசன். இவர் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர். சிறு வயதில் இருந்த இவருக்கு இசையின் மீது தீரா காதல் என்றே சொல்லலாம். இதனால் இவர் நாட்டுப்புறப் பாடகராக அவதாரம் எடுத்தார்.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் இவர் பல கச்சேரிகள் செய்து இருக்கிறார். மேலும், தெருக்கூத்து நிகழ்ச்சியிலும் இவர் பாடி இருக்கிறார். அதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் இவருக்கு சினிமாவில் பாட வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதற்காக இவர் கடுமையாக உழைத்தார். இவருடைய திறமையை புரிந்து கொண்ட இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இவருடைய இசைக்கு வாய்ப்பு தந்தார்.

- Advertisement -

அந்தோணி தாசன் திரைப்பயணம்:

இவர் முதன்முதலாக விஜய் சேதுபதியின் நடிப்பில் வெளியாகியிருந்த சூது கவ்வும் என்ற படத்தில் காசு பணம் துட்டு என்ற பாடலை பாடி இருந்தார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்திருந்தது. அதனை தொடர்ந்து இவர் பாண்டியநாடு, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற பல முன்னணி நடிகர்களின் படங்களில் குத்தாட்ட பாடல்களை பாடி இருந்தார். தற்போது இவருடைய குரலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

சின்னத்திரையில் அந்தோணிதாசன்:

அதுமட்டுமில்லாமல் இவர் பாடிய எல்லா பாடல்களுமே ஹிட் கொடுத்திருக்கிறது. இதனை அடுத்து இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியில் இவர் போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய சமையல் திறமையை காண்பித்து இருந்தார். இதன் மூலமும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.

-விளம்பரம்-

அந்தோணி தாசன் அம்மாவின் ஆசை:

இதனை தொடர்ந்து தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி பாடி கொண்டு வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய அம்மாவின் நீண்ட நாள் ஆசையை அந்தோணி தாசன் நிறைவேற்றி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. அதாவது இவருடைய தாய்க்கு விமானத்தில் பயணம் செய்வது நீண்ட நாள் கனவாம். இதனால் அந்தோணி தாசன் அவர்கள் தன்னுடைய தாயை விமானத்தில் அழைத்து சென்றிருக்கிறார்.

அந்தோணி தாசன் வெளியிட்ட வீடியோ:

இது சம்பந்தமான வீடியோ தான் இவர் தற்போது instagram பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில் அவர், பூமியிலிருந்து வானத்தைக் காட்டிய என் தாய்க்கு வானத்திலிருந்து பூமியை காட்டி விட்டேன் நன்றி என்று கூறியிருக்கிறார். இப்படி பதிவிட்டு அந்தோணி தாசனின் பதிவு சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வீடியோவுக்கு லைக்ஸ்குகளை குவித்து வருகிறார்கள்.

Advertisement