அமெரிக்காவில் ஏற்பட்ட சந்திப்பு, இருவரும் இல்லாமல் நடந்த நிச்சயதார்த்தம் – அனுராதாவின் காதல் கதை.

0
2363
anuradha
- Advertisement -

தன்னுடைய 6 வயதிலேயே அவரது இசைப் பயிற்சியை தொடங்கியவர். பின் கச்சேரிகள், இசை நிகழ்ச்சிகள் என்று அனைத்திலும் அனுராதா பங்கு பெற்றிருந்தார். மேலும், ஏ. ஆர். பங்கு தான் பம்பாய் திரைப்படத்தில் இடம்பெற்ற மலரோடு மலரிங்கு என்ற பாடலை குரூப் பாடகராக பாடி சினிமாவிற்கு அறிமுகமானார் அனுராதா. அதன் பின்னர் இவர் மின்சார கனவு படத்தில் இடம்பெற்ற அன்பென்ற மழையிலே என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார். அதன் பின்னர் இவர் பல படங்களில் பின்னணி பாடல்களை பாடி இருக்கிறார்.

-விளம்பரம்-

அது மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று பல மொழிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார் அனுராதா. தற்போது இவர் விஜய் டிவியில் பல ஆண்டு காலமாக ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார். அனுராதா திரைப்பட பாடல்கள் மட்டுமின்றி கர்நாடக இசைக் கச்சேரிகளையும் நடத்தி வருகிறார். இவர் இதுவரை 1000-க்கும் மேற்பட்ட இசைக் கச்சேரிகள் நடத்தியுள்ளார். அனைத்து மொழிகளிலும் சேர்த்து இவர் சுமார் 4000 பாடல்கள் பாடியுள்ளார்.

- Advertisement -

அமெரிக்காவில் சந்திப்பு :

இந்த நிலையில் சமீபத்தில் செய்தி ஊடகம் ஒன்றில் பேட்டி கொடுத்திருந்த அனுராதா ஸ்ரீராம் மற்றும் ஸ்ரீராம் பாசுரம் தம்பதி தங்களில் திருமணம் எப்படி நடந்தது என்று பேட்டி கொடுத்திருந்தனர். அதாவது இருவரும் அமெரிக்காவில் தான் சந்துள்ளனர். அங்கு தமிழ் தெரிந்த ஒரு நபர் புதிதாக வருபவர்களை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஸ்ரீராமை போட்டிருந்தனராம். அப்போதுதெல்லாம் இன்டர்நெட் கிடையத்தால் கடிதம் தான் அனுப்ப வேண்டியதிருந்தது. அமெரிக்காவில் இருந்து கடிதம் வந்தது அதனை என்னுடைய அப்பா படித்து விட்டு ராமர் இடம் இருந்தே கடித்தம் வந்துவிட்டது என கூறியிருந்தாராம்.

மிகவும் பிடித்து விட்டது :

நாங்கள் சந்தித்த மூன்றாவது மாதமே ஒரு கச்சேரி அங்கே நடத்தினோம். ஒருமுறை இவருடைய வீட்டிற்கு நான் சென்றிருந்தேன் அப்போது ஸ்ரீராம், அவருடைய அப்பா, அம்மா, தம்பி, அக்கா எல்லோரும் அமர்ந்து பாட்டு பாடிக்கொண்டிருந்தார். அப்போது நான் அங்கே சென்ற போது என்னையும் அமரவைத்து பட்டு பாட சொன்னார்கள். அதுதான் இவருடைய முதல் இம்ப்ரஷன். ஏனெற்றால் ஒரு பெண் பாடல் துறையில் வெற்றியடைய வேண்டும் என்றால் கண்டிப்பாக குடும்பத்துடைய ஒத்துழைய்ப்பு தேவைப்படும் ஆனால் இவர்கள் வீட்டில் இப்படி இருப்பதய் பார்த்தவுடன் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. அதர்க்கு பிறகுதான் அவர் மேலே காதல் வர தொடங்கியது என்று நினைக்கிறன் என்று கூறியிருந்தார் அனுராதா.

-விளம்பரம்-

அவங்க அப்பா வந்துட்டாரு :

பின்னர் சில காலங்களில் போனது நாம் ஒருவரை நன்பராக பார்த்து கொண்டிருக்கு போது தீடீரென ஒரு இடத்தில் நமக்கு மாறுதல்கள் ஏற்படும். எனக்கு நேரத்தை செலவழிக்க பிடிக்காது ஏனென்றால் இதயே நினைத்துக்கொண்டு வருந்துவதை விட சொல்லி பார்த்து விடலாம் என்று நினித்தது விட்டேன் என்று அனுராதா கூறியிருந்தார். அதற்கு பின்னர் அப்போதே அவருடைய அப்பா வந்து வீட்டார் என்னை சோதித்து பார்பதர்க்கு. ஆனால் அதற்கு முன்னரோ நாங்கள் அமெரிக்காவில் இருக்கும் போது எங்களுடைய குடும்பம் மும்பையில் சந்தித்து நிச்சயதார்த்தம் செய்து விட்டார்கள்.

10 பொருத்தில் 2 தான் :

பின்னர் திருமணம் நடந்து நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தோம், சொல்லப்போனால் எங்கள் இருவருக்கும் குழந்தைகள் பிறந்து விட்டன. அப்போது சரி என்று எங்கள் இருவருக்கும் ஜாதகம் பார்க்கலாம் என்று முடிவு செய்து பார்த்தனர். அப்போது ஜாதகத்தின் படி எங்கள் இருவருக்கும் இடையே உள்ள 10 பொருத்தங்களில் 2 பொருத்தங்கள் தான் சரியாக இருந்தது. என பல தங்களுடைய வாழ்க்கையில் நடந்த பல சுவாரசியமான நிகழ்வுகளை அந்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டனர் அனுராதா – ஸ்ரீராம் தம்பதி.

Advertisement