ஆஸ்கார் விருது வாங்கிய இயக்குனர் சொன்னது, ‘மகாராஜா’ படத்தால் அனுராக் காஷ்யப்புக்கு அடித்த ஜாக்பாட்

0
138
- Advertisement -

அனுராக் காஷ்யப் பற்றி மகாராஜா பட இயக்குனர் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. ஆனால், சமீப காலமாக இவர் நடிப்பில் வந்த படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை. பின் கடந்த ஆண்டு ஜீன் மாதம் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி இருந்த படம் ‘மகாராஜா’.

-விளம்பரம்-

இந்த படத்தை இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கி இருந்தார். இதில் மம்தா மோகன்தாஸ், முனிஷ்காந்த், சிங்கம் புலி, அனுராக் காஷ்யப், அபிராமி, சாச்சனா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது மட்டும் இல்லாமல் நல்ல வசூல் சாதனையும் செய்தது. இது விஜய் சேதுபதியின் உடைய ஐம்பதாவது படம். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் எதார்த்தமான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றிருந்தது.

- Advertisement -

மகாராஜா படம்:

மேலும், இந்த படம் 20 கோடி பட்ஜெட்டில் உருவாகியிருந்தது. ஆனால், உலக அளவில் இந்த படம் 186 கோடி வரை வசூல் செய்திருந்தது. அதோடு இந்த படம் கடந்த வருடம் நவம்பர் மாதம் சீன மொழியில் டப் செய்யப்பட்டு வெளியாகியிருந்தது. 2018 ஆம் வருடத்திற்கு பிறகு சீன மொழியில் அதிக வசூல் செய்த தமிழ் படமாக மகாராஜா மாறி இருக்கிறது. இந்த படம் கிட்டத்தட்ட 91.55 கோடி மட்டும் சீனாவில் வசூல் செய்து மிகப் பெரிய அளவில் சாதனை படைத்திருந்தது. இதை எடுத்து இந்த படத்திற்காக பல விருதுகள் கிடைத்திருக்கிறது.

அனுராக் காஷ்யப்க்கு அடித்த ஜாக்பாட்:

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் நித்திலன் சாமிநாதன், மும்பையில் நடந்த அனுராக் காஷ்யப் மகள் திருமணத்தில் நான் கலந்து கொண்டு அவரை சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம், ஆஸ்கார் விருது பெற்ற இயக்குனர் அலெஜாண்ட்ரோ இனார்ரிட்டு படத்தில் நடிக்க தன்னை அழைத்ததாகவும், அதற்கு காரணம் மகாராஜா படம் என்றும் தான் சொல்லியிருந்தார். இதை கேட்டவுடன் எனக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. ரொம்ப சந்தோசமாக இருக்கிறது என்று கூறி இருக்கிறார். அமோரஸ் பெர்ரோஸ், பேர்ட்மேன், தி ரெவெனென்ட் போன்ற படங்களை இயக்கியவர் அலெஜாண்ட்ரோ இனார்ரிட்டு.

-விளம்பரம்-

மகாராஜா கதைக்களம்:

படத்தில் விஜய் சேதுபதி, தன் வீட்டில் இருந்த லட்சுமியை காணவில்லை, திருடி விட்டார்கள் என்று போலீசில் புகார் அளிக்கிறார். லக்ஷ்மி என்றால் செல்வம் என்று அர்த்தம். போலீஸ், எந்த செல்வத்தை காணவில்லை என்று கேட்கிறார்கள். பின் விஜய் சேதுபதி தன்னுடைய லட்சுமியை குறித்து சொல்கிறார். அதைக் கேட்டு மொத்த போலீஸுக்குமே கோபம் வருகிறது. அதன் பின் விஜய் சேதுபதியை அடித்து விரட்டுகிறார்கள். ஒரு கட்டத்தில் தன்னுடைய லட்சுமியை கண்டுபிடித்து கொடுத்தால் 5 லட்சம் தருகிறேன் என்று விஜய் சேதுபதி போலீஸ் இடம் சொல்கிறார்.

படம் குறித்த தகவல்:

ஐந்து ரூபாய்க்கு கூட தேராத ஒரு பொருளை இவ்வளவு விலை கொடுத்து இவன் தேட காரணம் என்ற என்று எல்லோருக்குமே சந்தேகம் வருகிறது. பின் எல்லோருமே அந்த பொருளை தேட ஆர்வம் காட்டுகிறார்கள். இறுதியில் திருடு போன லட்சுமி என்ன? அந்த பொருளுக்கு விஜய் சேதுபதி ஏன் இவ்வளவு மெனக்கெடுகிறார்? அதை கண்டுபிடித்தார்களா? என்பதே படத்தின் மீதி கதை. தன் மகளுக்கு நடந்த அநீதிக்காக போராடும் தந்தையின் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி வியக்க வைத்து இருந்தார்.

Advertisement