இரண்டு பேரும் எனது இரு தூண்கள் – தன் முன்னாள் மனைவிகளுடன் புகைப்படத்தை வெளியிட்ட நயன் பட வில்லன்.

0
161
anurang
- Advertisement -

தனது முன்னாள் மனைவிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இயக்குனர் அனுராக் காஷ்யப் பதிவிட்டு இருக்கும் பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் திகழ்பவர் நயன்தாரா. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அதிலும், சமீப காலமாக இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

அந்த வகையில் நயன் நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான படம் “இமைக்க நொடிகள் ”. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று இருந்தது. இந்த படத்தில் அதர்வா, அனுராக் காஷ்யப் போன்றவர்களின் நடிப்பு மிகவும் பாராட்டை பெற்று இருந்தது. இந்த படத்தில் உள்ள அணைத்து கலைஞர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகவும் நேர்த்தியாக நடித்துக் கொடுத்து இருந்தார்கள்.

- Advertisement -

அனுராக் காஷ்யப் திரைப்பயணம்:

அதிலும் இந்த படத்தில் வில்லனாக நடித்து இருந்தவர் இந்தி நடிகர் அனுராக் காஷ்யப் . இவர் இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று இருந்தார். இவர் பாலிவுட்டில் மிக பிரபலமான இயக்குனராக விளங்கி கொண்டு இருக்கிறார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் எனப் பன்முகங்கள் கொண்டவர். இவர் பாலிவுட்டில் பல சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார்.

அனுராக் காஷ்யப் இயக்கும் படம்:

தற்போது இவர் டோபாரா என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படம் வரும் 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் டாப்சி நடித்திருக்கிறார். இந்த படத்தை ஏக்தா கபூர் தயாரிக்கிறார். மேலும், இந்த படத்தை விளம்பரப்படுத்தும் வேலையில் இயக்குனர் அனுராக் காஷ்யப் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் அனுராக் காஷ்யாப் சோஷியல் மீடியாவில் எப்போதுமே ஆக்டிவாக இருப்பார். சமீபத்தில் கூட அனுராக் காஷ்யப் படப்பிடிப்பு தளத்தில் ஒரு சோபாவில் படுத்து உறங்குவது போன்ற போட்டோவை பகிர்ந்து இருந்தார்.

-விளம்பரம்-

அனுராக் காஷ்யப் பெற்றோர்கள்:

அதேபோல் டெல்லி கல்லூரியில் தான் படித்த போது எடுத்து கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்து அதில் அவர், எனது பெற்றோர் 1970 ஆம் ஆண்டு ஒரு கிராமத்தில் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு தான் எனது தாயார் பட்டப்படிப்பை முடித்து இருந்தார். நான் சிறந்த பள்ளியில் படிக்க வேண்டும் என்பதற்காக எனது பெற்றோர் கடன் வாங்கி இருந்தார்கள். அது தான் இன்றைக்கு என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் அவர் தன்னுடைய இரு மனைவிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.

அனுராக் காஷ்யப் வாழ்க்கை:

அதாவது, அனுராக் காஷ்யப் அவர்கள் ஆர்த்தி பஜாஜ் என்பவரை 1997 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2009ஆம் ஆண்டு விவாகரத்து செய்தனர். பின் இவர் 2011 ஆம் ஆண்டு நடிகை கல்கி கோச்சலினை விவாகரத்து செய்தார். இதில் முதல் மனைவி மூலம் அவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த நிலையில் திடீரென அனுராக் காஷ்யப் தன்னுடைய முன்னாள் மனைவிகளின் புகைப்படத்தை பகிர்ந்து அதில் அவர், எனது இரண்டு தூண்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்த புகைப்படத்தில் 3 பேரும் சிரித்துக் கொண்டிருப்பது போன்று இருக்கின்றனது.

Advertisement