மாமன்னன் படத்துக்கு புது சிக்கல், ரிலீஸ் செய்வதை தடை செய்யக் கூறி உயர் நீதி மன்றத்தில் மனு – இதான் காரணம்

0
1826
Maamannan
- Advertisement -

உதயநிதியின் மாமன்னன் படத்தின் ரிலீஸ்க்கு ஏற்பட்டிருக்கும் புதிய சிக்கல் தற்போது சோசியல் மீடியாவில் ஆகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். ஆரம்பத்தில் இவர் ஒரு நடிகராக வேண்டும் என்ற கனவுடன் தான் சினிமாவுக்குள் வந்தார். பின் இவர் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதன் பின் 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாரி செல்வராஜ் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.

-விளம்பரம்-

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றதோடு மட்டும் இல்லாமல் பல்வேறு விருதுகளையும் பெற்றது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘கர்ணன்’. இந்த படத்தில் ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்து இருந்தார்கள். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்து இருந்தார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது.

- Advertisement -

மாமன்னன் படம்:

தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார் மாரி செல்வராஜ். இத்திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினிற்கு கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இவர்களை தொடர்ந்து இந்த படத்தில் வைகை புயல் வடிவேலு , பகத் பாசில், லால் போன்ற பல முன்னணி நடிகர்களும் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

படத்தின் ரிலீஸ்:

மேலும், இந்த படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. வருகிற ஜூன் 29ஆம் தேதி இந்த படம் திரையரங்கில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. சமீபத்தில் தான் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருந்தது. இதனால் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருக்கிறார். இந்நிலையில் மாமன்னன் படத்தின் ரிலீஸ்க்கு ஏற்பட்டிருக்கும் தடை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

-விளம்பரம்-

மாமன்னன் படத்திற்கு தடை:

அதாவது, இந்த படத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று ஓ எஸ் டி பிலிம்ஸ் நிறுவன உரிமையாளர் ராம சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். அவருடைய மனுவில் கூறியிருப்பது, கே எஸ் அதியமான் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆனந்தி, பாயல் ராஜ்புத், யோகி பாபு நடித்த ஏஞ்சல் என்ற படத்தை தயாரிக்க முடிவெடுக்கப்பட்டது. இது 2018 ஆம் ஆண்டு இந்த படத்தினுடைய படப்பிடிப்பு துவங்கி 80 சதவீதம் நிறைவடைந்து விட்டது.

உதயநிதி குறித்து சொன்னது:

மீதி 20% மட்டும்தான் படப்பிடிப்பு நடக்க வேண்டி இருந்தது. ஆனால், இந்த சூழ்நிலையில் ஏஞ்சல் திரைப்படத்தை நிறைவு செய்யாமல் மாமன்னன் படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கிறார். அதோடு இந்த படமே தன்னுடைய கடைசி படம் என்றும் கூறியிருக்கிறார். ஒப்பந்தப்படி இன்னும் எட்டு நாட்கள் கால்சீட் தராமல் ஏஞ்சல் படத்தின் படப்பிடிப்பிற்கு வராமல் புறக்கணித்து இருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். அதனால் இன்னும் இருக்கும் நாட்களில் படப்பிடிப்பை நிறைவு செய்து தர வேண்டும். 25 கோடி இழப்பீடாக வழங்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதற்கு நீதிமன்றத்திலும், உதயநிதி ஸ்டாலின் தரப்பிலும் எந்த பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Advertisement