தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை அனுஷ்கா. தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான ‘ரெண்டு’ படத்தின் மூலம் பரிட்சியமானார். அதன் பின்னர் ரஜினி,விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என்று ஒரு ரௌண்டு வந்தார்.
அம்மணிக்கு பட வாய்ப்புகள் அதிகரிக்க ஒரு பக்கம் உடல் எடையும் அதிகரித்தது. மேலும், இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றிய அனுஷ்கா அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. பாகுபலி 2 படத்துக்கு பிறகு சிலகாலம் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
இதையும் பாருங்க : மேயாத மான் இந்துஜாவா இது.! விடியோவை பார்த்து குழம்பிய ரசிகர்கள்.!
தற்போது பிரபாசுக்கு ஜோடியாக ஒரு படத்திலும், கோனா வெங்கட் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும், தெலுங்கில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்திலும்முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த முதற்கட்ட படப்பிடிப்புகள் படு மும்மரமாக நடந்து வருகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் ஆந்திராவில் நடைபெற்றபோது அனுஷ்கா உயரத்தில் இருந்து கீழே தவறி விழுந்து கால் எலும்பு முறிந்ததாகவும் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு சில நாட்கள் ஓய்வில் இருந்தார் என்றும் தகவல் வெளியானது.