அடுத்த ஆண்டு இந்த மாசம் குட்டி கோலி பொறந்துடவார் – கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட அனுஷ்கா.

0
901
kohli
- Advertisement -

சினிமாவும் கிரிக்கெட்டுக்கு என்றும் பிரிக்கமுடியாத ஒரு விடயமாக தான் இருந்து வருகிறது. சினிமாவில் இருக்கும் எத்தனையோ நடிகைகள் கிரிக்கெட் வீரர்களை திருமணம் செய்து கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில் பிரபல பாலிவு நடிகையான அனுஸ்கா ஷர்மாவும் ஒருவர்.விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா ஆகியோர் பல ஆண்டுகளாக காதல் செய்தது 2017 ஆம் ஆண்டு தங்களது பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

-விளம்பரம்-
https://www.instagram.com/p/CEYZIPllBzF/

இந்த ஜோடிக்கு ரசிகர்கள் மத்தியில் விருஷ்கா என்ற செல்லப் பெயரும் உள்ளது. அனுஷ்கா ஷர்மா கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.இவர் மைதானத்திற்கு வருவதால் தான் விராட் கோலி சரியாக ஆடுவது இல்லை என்ற சில சர்ச்சைகளும் கூட எழுந்தது.கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வீதியில் சிறு காகிதம் போட்ட நபரை பின் தொடர்ந்து வாக்கு வாதத்தில் கூட ஈடுபட்டது பெரும் சர்ச்சையாக வெடித்து.

- Advertisement -

பல்வேறு விளம்பரங்களில் நடித்து வரும் இவர், சமீபத்தில் கூட புகையிலை விளம்பர படமொன்றில் நடித்திருந்தார்.இவர்கள் இருவரும் வாழ்ந்தது போதும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிகிறார்கள் என்பது போல் இந்த செய்தி பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் இந்த விஷயத்தில் இது வதந்தி என்று தெரியவந்துள்ளது. 2016ஆம் ஆண்டின் போதும் கூட இதே போன்று இவர்கள் இருவருக்கும் இடையேயான சிறிய பிரிவினை பெரிய விடயமாக கிளப்பிய நெட்டிசன்கள் மீண்டும் அதே வேலையை துவங்கி இருக்கிறார்.

https://www.instagram.com/p/CEYZIPllBzF/

இந்த நிலையில் நடிகை அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக இருக்கிறார் என்று கடந்த சில நாட்களாக கிசுகிசுக்கப்பட்டது. வழக்கம் போல இந்த செய்தியும் வதந்தி என்று நினைத்து வந்த நிலையில் தான் கர்பமாக இருப்பதாக நடிகை அனுஷ்கா ஷர்மா அறிவித்துள்ளார். வரும் ஜனவரி மாதம் நாங்கள் மூன்று பேராக மாறப்போகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement