தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு நடுவராக வரப்போகும் அனுஷ்கா.! என்ன ஷோ தெரியுமா ?

0
523

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை அனுஷ்கா. தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான ‘ரெண்டு’ படத்தின் மூலம் பரிட்சியமானார். அதன் பின்னர் ரஜினி,விஜய், அஜித், சூர்யா, விக்ரம் என்று ஒரு ரௌண்டு வந்தார்.

Image result for anushka shetty in tv show

அம்மணிக்கு பட வாய்ப்புகள் அதிகரிக்க ஒரு பக்கம் உடல் எடையும் அதிகரித்தது. மேலும், இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றிய அனுஷ்கா அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. பாகுபலி 2 படத்துக்கு பிறகு சிலகாலம் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

இதையும் படியுங்க : வாணி ராணி மானஸிற்கு திடீர் திருமணம்.! பெண் யார் தெரியுமா.! 

- Advertisement -

தற்போது பிரபாசுக்கு ஜோடியாக ஒரு படத்திலும், கோனா வெங்கட் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த நிலையில் நடிகை அனுஷ்கா தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3 வது சீசனை தொகுத்து வழங்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன்-3 விரைவில் தொடங்க இருக்கிறது.

இதன் முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆரும், இரண்டாவது சீசனை நானியும் நடத்தினார்கள். ஜூனியர் என்.டி.ஆர் ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடிப்பதால் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு திரும்ப வாய்ப்பு இல்லை. எனவே தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனை நடத்துவது குறித்து அனுஷ்காவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. 

-விளம்பரம்-
Advertisement