பாகுபாலி ஜோடி அனுஷ்கா மற்றும் பிரபாஸ் ஆகியோர் இருவரும் காதலில் உள்ளதாகவும், விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும் கடந்த பல மாதங்களாக வதந்திகள் வந்து கொண்டிருந்தது. தற்போது அந்த வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார் அனுஷ்கா .
பாகுபாலி படத்தின் முதல் பாகம் வந்தவுடம் பிரபாசுக்கு 6000 திருமணம் வரன்கள் வந்தது என அவர் முன்னர் கூறி இருக்கிறார். இந்நிலையில் அனுஷ்கா நடித்துள்ள ‘பாகமதி’ படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனுஷ்கா தனக்கும் பிரபாசுக்கும் உள்ள உறவு குறித்து பேசினார்.
பிரபாஸ் எனக்கு எப்போதும் நல்ல நண்பர்தான். அவருடன் திருமணம் எல்லாம் இல்லை. நல்ல பையன் கிடைக்கும் வரை காத்திருப்பேன் எனக் கூறினார் அனுஷ்கா.
அனுஷ்கா தனி ஹீரோயினாக நடித்திருக்கும் படம் பாகமதி. இந்த படத்தின் டீஸர் சென்ற வருட இறுதியில் வெளியானது. தற்போது பாடல்கள் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகி உள்ள இந்த படத்திற்கு தமன் இசையமித்துள்ளார்.