சினிமால ஏன் என்ன ஒதுக்குறாங்கன்னே தெரில, சமுத்திரகனி சார மீட் பன்னினேன் ஆனா – அப்பா பட சிறுவன் எமோஷனல் பேட்டி

0
404
- Advertisement -

இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘அப்பா’. இப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ‘நாசத்’ சமீபத்தில் சமூக வலைதளத்தில் அளித்த பேட்டி இப்போது வைரலாகியுள்ளது. இந்த படத்தில் சமுத்திரக்கனி அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அவரைத் தொடர்ந்து இந்த படத்தில் தம்பி ராமையா, நமோ நாராயணா, வினோதினி விக்னேஷ் , யுவஸ்ரீ லட்சுமி போன்ற பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருந்தார்கள்.

-விளம்பரம்-

அந்த வகையில் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டவர்களின் ஒருவர் நாசத். இவர் இந்த படத்தில் மயில் வாகனம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் . இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வெகுவாக பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து இவர் தொண்டன், கொளஞ்சி, பிழை போன்ற சில படங்களில் நடித்துள்ளார்

- Advertisement -

நாசத் பற்றிய தகவல்:

சமீபத்தில் அளித்த பேட்டியில் நாசத், அவர் ஈரோடு அருகில் கொக்கராயன் பேட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், தனக்கு பட வாய்ப்புகள் வரும்போது மட்டும் சென்னை வருவார் என்றும் கூறியிருந்தார். பின்பு கடந்த 8 மாதங்களாக சொந்த ஊரில் செய்த பிசினஸை கொடுத்துவிட்டு, இப்போது பட வாய்ப்பு தேடி மீண்டும் சென்னை வந்துள்ளதாக கூறியுள்ளார்.

சினிமாவில் பிரேக் குறித்து:

சினிமாவில் தனது பிரேக் பற்றி நாசத் கூறுகையில், அவருக்கு முதல் பட வாய்ப்பு தன் அண்ணன் ‘மூடர் கூடம்’ படத்தின் இயக்குனர் நவீனால் ரொம்ப ஈசியாக கிடைத்தது என்றார். அதனைத் தொடர்ந்து அப்பா, தொண்டன் , பிழை போன்ற படங்களோடு மலையாளத்திலும் நடித்தேன் என்றார். கடந்த மூன்று வருடங்களாக பட வாய்ப்புகள் எதுவும் வருவதில்லை என்றவர், எல்லாருக்கும் நேரம் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது, எனக்கான டைம் வரும்போது கண்டிப்பா வாய்ப்பு தேடி வரும் என வருத்தத்தோடு கூறியிருந்தார்.

-விளம்பரம்-

இயக்குனர் சமுத்திரக்கனி குறித்து:

மேலும் இயக்குனர் சமுத்திரக்கனி அவர்கள் சினிமாவில் அவருக்கு கிடைத்த பரிசு என்றும், அவர் சினிமாவை தாண்டி தனக்கு ரிலேஷன் போல ஆகிவிட்டதாகவும் நாசத் கூறினார். கடைசியாக அவருடைய பிறந்தநாள் அன்று பேசியதாகும், “கூடிய விரைவில் நாம் ஏதாவது செய்வோம்” என்று இயக்குனர் சமுத்திரக்கனி கூறியதாகவும் நாசத் பகிர்ந்தார்.பின்பு ‘அப்பா 2’ பட சூட்டிங் லாக் டவுனால் நின்று போனதாகவும், கண்டிப்பாக கூடிய விரைவில் அந்தப் படத்தின் வேலைகள் தொடங்கும் என எதிர்பார்க்கிறேன் என்றார்.

நடிகர் அஜித்தின் ரசிகர்:

அதனைத் தொடர்ந்து தனக்கு நடிகர் அஜித் ரொம்ப பிடிக்கும் என்றும், அவருடன் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆசை எனவும் நாசத் கூறினார்.மேலும், “ஜெயிக்கிறதுக்கு முன்னாடி ஆடுறதும், ஜெயிச்சதுக்கு அப்புறம் கொண்டாடறதும் என் அகராதியிலேயே இல்ல” என்ற அஜித் சாரின் டயலாக் ரொம்ப பிடிக்கும் என்றவர், தனக்கு இருக்கும் கான்ஃபிடன்ஸ் அஜித் சாரை பார்த்து வந்ததுதான் என்றார். எல்லாருக்கும் ஒரு பிளஸ் இருக்கும், எனக்கு என்னுடைய உருவம் தான் பிளஸ் என்று பெருமையோடு நாசத் கூறினார்.

Advertisement