தற்போது தனது அடுத்த படத்திலும் மூன்றாவது முறையாக முருகதாசுடன் கூட்டணி போட்டுள்ளார் விஜய். இந்த படத்தின் ஷூட்டிங் வரும் ஜனவரி மாதம் துவங்கவுள்ளது. இந்த படத்திற்க்கான ஹீரோயின் மற்றும் படக்குழு தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட 5 டீஸர் எது தெரியுமா! மெர்சலுக்கு எந்த இடம்?
அதே போல், கத்தி படத்தினைப் போலவே இந்த படத்திலும் இரண்டு கேரக்டரில் விஜய் நடிப்பதாக செய்திகள் வந்துள்ளது. மேலும், படத்தில் ஒரு விஜய் மாற்றுத்திறனாளியாகவும் மற்றொரு விஜய் விவசாயியாகவும் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இப்படத்தில் மேலும், ஒரு விவசாயிகளின் பிரச்சனையை பற்றி பேசவுள்ளதாகத் தெரிகிறது.
இப்படத்தில் சமீபத்திய பிரச்சனையான ஹைட்ரோ கார்பன் போராட்டம் உள்ளிட்ட பிரச்சனைகளை பற்றிய படமாக அமையும் எனத் தெரிகிறது.




