தயாரிப்பாளரை கூட முடிவு செய்து விஜய்யை அனுகிய முருகதாஸ் – ஆனால், விஜய் சொல்லியுள்ள காரணம்.

0
498
Armurugadoss
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். பொதுவாகவே இவருடைய படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து உள்ளது. மேலும், இவருடைய படத்தை எடுப்பதற்கு பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் வரிசையில் காத்திருப்பார்கள். அந்த அளவிற்கு இவருடைய படங்கள் தமிழக மக்கள் மத்தியில் மட்டும் இல்லாமல் உலக அளவில் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய்– ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் மூன்று படங்கள் வெளியாகி இருக்கிறது. 2012ஆம் ஆண்டு வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த துப்பாக்கி படத்தில் முதன்முதலாக ஏ ஆர் முருகதாஸ் உடன் விஜய் பணி புரிந்திருந்தார்.

-விளம்பரம்-
After Rajinikanth film, AR Murugadoss to team up with Vijay for fourth time  - Movies News

இதன் வெற்றியைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு வெளிவந்த கத்தி படத்திலும் விஜய் அவர்கள் நடித்து இருந்தார். பிறகு 2018 ஆம் ஆண்டு வெளிவந்து மிகப்பெரிய அளவில் வசூலைக் குவித்த சர்க்கார் படத்தில் விஜய் அவர்கள் ஏ ஆர் முருகதாஸ் உடன் இணைந்து பணிபுரிந்து இருந்தார். இந்நிலையில் விஜய் அவர்கள் ஏ ஆர் முருகதாஸ் படத்தின் கதையை கேட்காமலேயே நடிக்க முடியாது என்று கூறியதாக தகவல் வெளியாகி இருந்தது. இது தொடர்பாக சமீபத்தில் பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் விளக்கம் அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது,

இதையும் பாருங்க : என்ன மாங்கனி இதெல்லாம் – மெல்லிய உடையில் உள்ளாடை தெரியும் படு கிளாமர் கோலத்தில் அனு இம்மானுவேல்

- Advertisement -

முதலில் ஏ. ஆர் முருகதாஸ் அவர்கள் படத்தின் கதை சுருக்கத்தை மட்டும் விஜய்யிடம் சொல்லியிருந்தார். அது விஜய்க்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் கதையை உருவாக்கி வாருங்கள் படம் எடுக்கலாம் என்று விஜய் சொன்னவுடன் முருகதாஸும் முதல் பாதியை தயார் செய்து விஜய்யிடம் சொன்னார். விஜயும் சரி என்று ஒத்துகொண்டு படத்தை எடுக்க ஆரம்பித்தார்கள். பிறகு முருகதாஸ் படத்தின் இரண்டாம் பாதி சொன்ன போது விஜய்க்கு அந்த படத்தின் கதை பிடிக்கவில்லை. பின் தன்னால் எந்த நஷ்டம் அடையக் கூடாது என்றும், தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் சரி என்று சொன்னால் நடித்துக் கொடுத்து விடலாம் என்றும் விஜய் நினைத்திருந்தார். பிறகு முருகதாஸ் சன் பிக்சர்ஸ் இடம் கதையை சொல்லி இருக்கிறார். ஆனால், ஆனால் அவர்களும் கதை பிடிக்கவில்லை.

பின் சன் பிக்சர்ஸ் நீங்கள் வேறு தயாரிப்பாளரை வைத்து எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார். அதன் பின் தான் விஜய் எனக்கும் விருப்பமில்லை என்று கூறினார். சன் பிக்சர்ஸ் ஒத்துக்கொண்டால் நடிக்கலாம் என்று தான் விஜய் இருந்தார். ஆனால், அவர்கள் பிடிக்க வில்லை என்று சொன்னவுடன் வேறு தயாரிப்பாளரை வைத்து படம் எடுப்பதில் விஜய்க்கு உடன்பாடு இல்லை. இதனால் தான் விஜய்-முருகதாஸ் கூட்டணி மீண்டும் சேர முடியாமல் போனதற்கு காரணம் என்று கூறியிருந்தார். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement