சென்னைனு ஒரு ஊரு இருக்கு ஞாகபம் இருக்கா, சென்னையில் இசை நிகழ்ச்சி நடத்தாது குறித்து கேட்ட ரசிகர் – Arன் நச் பதில்.

0
765
- Advertisement -

இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் சிறுவயதிலிருந்தே இசையில் அதிக ஆர்வம் உடையவர். இதனால் பல கச்சேரிகளில் பாடி உள்ளார். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடதொடங்கினார் ரகுமான் . தனது முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார். மேலும், ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமானது ரோஜா படம் என்றாலும், அதற்கு முன்பாக இளையராஜா, டி ராஜேந்தர் என்று பல்வேறு இசையமைப்பாளர்களிடன் உதவியாளராக பணியாற்றியவர் என்று குறிப்பிடத்தக்கது. பின் இவர் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்து உள்ளார்.

-விளம்பரம்-

ஆஸ்கார் நாயகன் :

மேற்கத்திய இசையை பாமர மக்களுக்கு கொண்டு சென்றவர். தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர். மேலும், அமைதியான சுபாவம் கொண்ட ஏ ஆர் ரகுமான் தன்னுடைய இசையால் அனைவரையும் பேச வைத்தார். மேலும், இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தமிழ் மீது தீராத காதல், அன்பும் கொண்டவர். சர்வதேச அளவில் திரைத் துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருதை அதுவும் இரண்டு விருதுகளை வென்று உலக அரங்கில் தமிழை தலைநிமிரச் செய்தவர் ஏ.ஆர். ரகுமான். இப்படி குறுகிய காலத்திலேயே பாலிவுட், ஹாலிவுட் என எல்லா மொழி படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார் ரகுமான்.

- Advertisement -

ஏ ஆர் ரகுமான் திரைப்பயணம்:

அதுமட்டும் இல்லாமல் அந்த காலத்திலேயே நவீன இசை கருவிகளை பயன்படுத்தி இளசுகளை தன் பக்கம் ஈர்த்தார் ஏ ஆர் ரஹ்மான். ரஜினி, கமல், விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஏ ஆர் ரஹ்மான் பணியாற்றி இருக்கிறார். இப்ப இருக்கிற இசை இளைஞர்களுக்கு ஏ ஆர் ரகுமான் தான் வாத்தியார் என்று சொல்லலாம். தற்போது இவர் பல படங்களில் கமிட் ஆகி பிசியாக இருக்கிறார்.

புனே நிகழ்ச்சி :

இந்நிலையில் தான் ஆஸ்கர் நாயகன் ஏ ஆர் ரகுமான் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே ஃபீடிங் ஸ்மைல்ஸிற்காக தனது முழு அளவிலான நேரடி இசை நிகழ்ச்சியை நடத்த உள்ளார். ஃபீடிங் ஸ்மைல்ஸ் என்பது மோசமான வறுமையில் உள்ள குடும்பங்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை வழங்கி அவர்களின் குழந்தைகளின் பசியை போக்குவதற்கு கொண்டு வரப்பட்ட ஒரு அமைப்பு. இந்த காரணத்திற்காகத்தான் “ஹோலி பார்ட்டிஸ் 2023” என்ற தலைப்பிலான இந்த பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியை புனேவில் உள்ள தி மில்ஸில் மார்ச் 7 ஆம் தேதி நடத்தவுள்ளார் ஏ ஆர் ரகுமான்.

-விளம்பரம்-

ஏ ஆர் ரகுமான் ட்விட்டர் பதிவு :

இந்நிலையில் ஏ ஆர் ரகுமான் தன்னுடை ட்விட்டர் பக்கத்தில் “புனே! எப்படி போகிறது! மார்ச் 7 ஆம் தேதி தி மில்ஸ், ராஜாபகதூர் இன்டர்நேஷனல் லிமிடெட் புனேவில் உங்கள் அனைவருக்கும் நிகழ்ச்சியை நடத்த ஆவலுடன் காத்திருக்கிறோம் என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகவே சென்னை ரசிகர்கள் ஏ ஆர் ரகுமானின் நிகழ்ச்சிக்காக காத்துக் கொண்டிருக்கிரோம் என்று சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தனர்.

ரசிகையில் கேள்விக்கு பதிலளித்த ஏ ஆர் ரகுமான் :

அப்படியொரு நிலையில் தான் இந்த பதிவை பார்த்த ரசிகை ஒருவர் “சென்னை என்ற பெயர் கொண்ட ஒரு ஊர் இருக்கிறது உங்களுக்கு நினைவிருக்கிறதா” என்று பதிவிட்டு இருந்தார் அதாவது சென்னையில் ஏ ஆர் ரகுமான் இசைக் கச்சேரி நடத்தி பல மாதங்கள் ஆகிறது என்பதை குறிப்பிட்டு அந்த ரசிகை இப்படி ஒரு பதிவை போட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த ஏ ஆர் ரகுமான் அனுமதி கிடைக்க ஆறு மாதம் ஆகும் என்பதைப் போல அந்த ரசிகைக்கு பர்மிஷன் பர்மிஷன் பர்மிஷன் ஆறு மாத கால பிராசஸ் என்று பதில் அளித்துள்ளார். இதன் மூலம் இசை நிகழ்ச்சி நடத்த அனுமதி கிடைக்க 6 மாதம் காலம் ஆனது என்று கூறியுள்ளார் ஏ ஆர் ரகுமான். இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement