‘ஈ ஆரி எச மாரி’ & ‘தீ ஆரி எச மாரி’ – இரண்டுமே இல்ல. பொன்னி நதி பாடல் வரிகளின் அர்த்தம் என்ன ? ஏ ஆர் ரஹ்மான் சொன்ன விளக்கம்.

0
859
ponninadhi
- Advertisement -

பொன்னி நதி பாடலில் வரும் கோரஸ் வரிகளின் விளக்கத்தை ஏ ஆர் ரஹ்மான் தெளிவுபடுத்தி இருக்கிறார். தமிழ் சினிமாவின் 70 ஆண்டு கனவான வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை தற்போது இயக்குநர் மணிரத்னம் இயக்கி சாதித்து காட்டி இருக்கிறார். பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் மணிரத்னத்தின் திரைவாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக பிரம்மாண்டமாக இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் விக்ரம், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், கார்த்தி, ரவி, விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி, ரியாஸ்கான், லால், மோகன் ராமன், பாலாஜி சக்திவேல் என சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில் ரவிவர்மன் ஒளிப்பதிவாளராகவும், தோட்டாதரணி கலை இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார்கள்.

- Advertisement -

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்த பொன்னியின் செல்வன் படம் நேற்று பிரம்மாண்டமாக வெளியாகி இருக்கிறது. படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகர்களும் மாஸ் காட்டி இருக்கிறார்கள். நாவலை படித்தவர்கள், படிக்காதவர்கள் என அனைவரையுமே சந்தோசப்படுத்தும் வகையில் படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குனர். அதோடு தமிழ் சினிமாவின் பெருமையை வேறு ஒரு இடத்திற்கு கொண்டு சென்று விட்டார் என்று சொல்லலாம்.

இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் பொன்னிநதி பார்க்கணுமே என்ற பாடல் பட்டித் தொட்டி எங்கும் பிரபலமாகி இருக்கிறது.இந்நிலையில் இந்த பாடலின் உண்மையான அர்த்தம் குறித்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும், ஈஆரிஎசமாரிக்கும் அர்த்தம் ஈ – வில், அம்பு, ஈட்டி ஆரி-வீரன், எச- இசைமாரி – மழை என்று Rj அஞ்சனா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

இந்த வீடியோவை கண்ட பலரும் ‘ஓ இதற்கு இதான் அர்த்தமா’ என்று அந்த வீடியோவை பகிர்ந்து வந்தனர். இப்படி இந்த பாடல் வரிகளுக்கு பலரும் பல அர்த்தங்கள் குறிக்கொண்டு வரும் நிலையில் இந்த பாடலை எழுதிய இளங்கோ கிருஷ்ணன் ‘அந்த வரிகளுக்கு எல்லாம் எந்த அர்த்தமும் கிடையாது. எதோ சந்ததிற்கு பொருந்தும்படி எழுதிய வரிகள் தான் அது என்றார். இப்படி ஒரு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் Dj தீபிகா பொன்னி நதி பாடலை தீம் பார்க் ஒன்றின் நீச்சல் குளம் அருகில் போட்டு வைப் செய்து இருந்தார்.

அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இப்படி ஒரு நிலையில் இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் ‘ரீகாரி எசமாரி’ என்று பதிவிட்டுள்ளார். இதனை dj தீபிகாவும் தன் இன்ஸ்ட்டா ஸ்டோரியில் பகிர்ந்து இருக்கிறார். இதன் மூலம் பொன்னி நதி பாடலில் வந்த அந்த குறிப்பிட்ட கோரஸ் ”‘ஈ ஆரி எச மாரி’ யும் இல்ல ‘தீ ஆரி எச மாரி’ யும் இல்லை என்பது உறுதியாகி இருக்கிறது.

Advertisement