பொன்னியின் செல்வனில் இருந்து வைரமுத்து விலகியது ஏன்? – ஏ.ஆர்.ரகுமான் பதில்

0
2167
a-r-rahman-vairamuthu
- Advertisement -

தமிழ் சினிமாவில் வரலாற்று சிறப்புமிக்க கதைகளையும் மல்டி ஸ்டார் கொண்டு படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவனாக மணிரத்னம் தற்போது விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் சிலரையும், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் என பாலிவுட் நட்சத்திரங்களையும் வைத்து ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்கி வருகிறார். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்திற்கு பிரபல கவிஞர் வைரமுத்துதான் பாடல்களை எழுதுவதாக இருந்தது இந்நிலையில் இந்த படத்தில் இருந்து வைரமுத்து அதிரடியாக நீக்கப்பட்டு இருக்கிறார்.

-விளம்பரம்-
Image result for manirathnam vairamuthu a r

- Advertisement -

இந்த விஷயம் தற்போது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணமே பிரபல பாடகியான சின்மயி தான். தமிழ் சினிமாவின் தேசிய விருதுபெற்ற பாடலாசிரியர் வைரமுத்து மீது பிரபல பிண்ணனி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து #metoo என்ற ஹேஷ்டேகை பயன்படுத்தி பல்வேறு பெண்களும் தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை கூறி வருகின்றனர்.

பாடகி சின்மயி கூறி இருந்த குற்றச்சாட்டில் கடந்த 2004 ஆம் ஆண்டு “வீழ மாட்டோம்” ஆல்பம் வெளியீட்டுக்காக சுவிட்சர்லாந்து சென்றிருந்தபோது வைரமுத்து சார்பாக தனக்கு பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டதாக சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து பல பெண்களும் கவிஞர் வைரமுத்து மீது செக்ஸ் புகார்களை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஏ ஆர் ரஹ்மான் தனது பிறந்தநாள் கொண்டத்தை முன்னிட்டு செய்தி தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பங்கேற்று இருந்தார்.

-விளம்பரம்-

அப்போது அவரிடம் பொன்னியின் செல்வன் படத்தில் இருந்து வைரமுத்து நீக்கப் பட்டது ஏன் என்று செய்தியாளர் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த ஏ ஆர் ரஹ்மான், இனி யார் எழுத போகிறார்கள் என்பதை நீங்க பார்ப்பீர்கள். இன்னும் அதை பற்றி ஆலோசிக்கவில்லை. எதுவாக இருந்தாலும் மணிரத்னம் இதற்கான விளக்கத்தை கொடுப்பார் என்று கூறியுள்ளார் ஏ ஆர் ரஹ்மான்.

Advertisement