தமிழ் சினிமாவின் இசைப் புயலாக கருதப்படும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான். கோலிவுட்டில் இளையராஜாவுக்கு இணையாக ரஹ்மானும் கொண்டாடப்பட்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிறமொழி படங்களுக்கும் இசை அமைத்து இருக்கிறார். இவர் 30 ஆண்டுகளுக்கு மேல் வெற்றிகரமான இசையமைப்பாளராக வலம் வருகிறார். மேலும், சமீபத்தில் அளித்த பேட்டியில் ஏ ஆர் ரகுமான், பாலிவுட்டில் மதரீதியான பாகுபாடுகள் நிறைய இருப்பதாக கூறப்படுகிறது.
கங்கனா நடித்த எமர்ஜென்சி படத்தில் chhavaa பிரிவினை ஏற்படுத்தும் படம் என்றும் கூடியிருந்தார்.

பின் இது தொடர்பாக கங்கனா ரனாவத், அன்புள்ள ரகுமான் ஜி. நான் ஒரு காவி கட்சியை ஆதரிப்பதால் திரை உலகில் நான் முன்முடிவோடு அணுகப்படுவதையும் நிறைய பாரபட்சத்தையும் எதிர் கொள்கிறேன். ஆனால், உங்களை விட பாரபட்சமும் வெறுப்பும் கொண்ட ஒருவரை நான் பார்த்ததே இல்லை என்று தான் சொல்லணும். நான் இயக்கிய எமர்ஜென்சி கதையை உங்களுக்கு சொல்ல விரும்பினேன். ஆனால், கதை கேட்பதை விடுங்கள். நீங்கள் என்னை சந்திக்க கூட மறுத்துவிட்டீர்கள்.
ரகுமான் சொன்னது:
பிரச்சார படத்தினுடைய ஒரு பகுதியாக இருக்க நீங்கள் விரும்பவில்லை என்று எனக்கு சொன்னார்கள். ஆனால், எமர்ஜென்சி ஒரு தலை சிறந்த படைப்பு என்று விமர்சகர்கள் பாராட்டினார்கள். இன்னும் சொல்லப்போனால் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட நான் படத்தை அணுகி இருந்த விதத்தை பாராட்டி எனக்கு கடிதம் எல்லாம் அனுப்பி இருந்தார்கள். ஆனால், உங்கள் கண்ணை மட்டும் வெறுப்பு மறைத்தது. உங்களுக்காக நான் வருந்துகிறேன் என்று கூறியிருந்தார்.

கங்கனா ஆவேசம்:
இந்த நிலையில் இதற்கு விளக்கம் கொடுத்து ஏ ஆர் ரகுமான் போட்ட பதிவில், அன்பு நண்பர்களே, நம்முடைய கலாச்சாரத்தை மதிக்கவும், அதனுடன் ஈடுபடவும், கொண்டாடவும் எனக்கு எப்போதுமான வழி இசையாக தான் இருந்தது. இந்தியா தான் என்னுடைய உத்வேகம், என்னுடைய குரு, என்னுடைய வீடு. நம்முடைய நோக்கம் சில சமயங்களில் தவறாக புரிந்து கொள்ளப்படலாம் என்பதை நான் உணர்கிறேன். இந்த கலாச்சாரத்தை மதிப்பதும் சேவை செய்வதும் எப்போதும் இசையின் மூலம் செய்வது தான் என்னுடைய நோக்கமாக இருந்தது.
View this post on InstagramA post shared by AR Rahman: Official Updates (@arrofficialupdates)
ரகுமான் விளக்கம்:
நான் ஒருபோதும் யாரையும் புண்படுத்த நினைத்ததில்லை. என்னுடைய நேர்மையை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இந்தியனாக இருப்பதற்கு நான் ஆசீர்வதிக்கப்பட்டதாக கருதுகிறேன். இதனால் தான் மாறுபட்ட கலாச்சாரங்களின் குரலை கொண்டாட கூடிய கருத்து சுதந்திரம் இடம் கிடைத்தது. இசையின் வாழ்க்கையில் ஒவ்வொரு பயணமும் என்னுடைய இலக்கை நிறைவேற்றி இருக்கிறது. இந்த நாட்டில் நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன். கடந்த காலத்தை மதிக்கவும் நிகழ்காலத்தை கொண்டாடும் எதிர்காலத்தை ஊக்குவிக்கும் இசைக்கான அர்ப்பணிப்பாகவே என்னுடைய வாழ்க்கை எப்போதும் இருக்கும். ஜெய்ஹிந்த் என்று கூறியிருக்கிறார்.






