ஏ ஆர் ரஹ்மான் மகள்கள் வாங்கி இருக்கும் கார் குறித்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவை உலக மக்களுக்கு எடுத்துச்சென்று தன்னுடைய இசையின் மூலம் அனைவரையும் கட்டிப்போட்டவர் ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான். இவர் தற்போது “லாம் சலாம்” என்ற திரைபடத்தில் பாடல்களை இயக்குவதுதில் மிகவும் மும்முரமாக இருக்கிறார். இப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மூத்த மகளான ஜஸ்வர்யா ரஜினிகாந்த இயக்கி வருகிறார்.
இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் போன்ற நடிகர்கள் இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கின்றனர். இப்படத்தினை லைகா ப்ரொடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இப்படத்தில் ரஜினிகாந்த் கௌரவ கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.இப்படத்திற்கு இசையமைப்பதில் மும்முரமாக இறங்கியுள்ளார்.
இப்படி இசையமைத்து கொண்டே சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கிறார். இந்நிலையில் தான் தன்னுடைய மகள்கள் வாங்கியுள்ள விலையுயர்ந்த காரின் புகைப்படபடத்தை தனது சோசியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டிருந்தார். இசை புயல் ஏஆர் ரகுமான் அவர்களுக்கு மொத்தம் மூன்று பிள்ளைகள் இவர்களில் கதீஜா ரகுமான் மற்றும் ரஹிமா ரகுமான் இருவரும் கார் அருகே நின்றபடி புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தனர்.
இவர்கள் இருவரில் கதீஜா ரகுமான் இசைக்கலைஞர் மற்றும் ஏ ஆர் ரகுமான் அறக்கட்டளை இயக்குனராக உள்ளார். மற்றவர்கள் இயக்குனர், பாடல் , தயாரிப்பு என பல துறைகளில் கலக்கி வருகின்றனர். இந்நிலையில் தான் கதீஜா ரகுமான் மற்றும் ரஹிமா ரகுமான் இந்த எலெக்ட்ரிக் காரை வங்கியுள்ளதாக தன்னுடைய ஷோசியல் மீடியாவில் ஏஆர் ரகுமான் பதிவிட்டிருந்தார். இவர்கள் வாங்கியுள்ள காரானது தற்போது இந்தியாவில் கிடைக்கும் மிக அதிக விலையுள்ள எலெக்ட்ரிக் காராகும்.
இந்த கார் போர்ஷே நிறுவனமானது 18 விதமான கார் வகைகளாக தயாரித்து வருகிறது. இந்த வகைகளில் ப்ளூ மெட்டாலிக் வகையான காரை வாங்கியுள்ளனர். இந்த கார்களின் ஷோரூம் விலை மட்டும் 1.5 லிருந்து 2.5 கோடி ருபாய் இருக்கும் என தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த விலையானது எக்ஸ் ஷோரூம் விலை மட்டும்தான்.அபப்டி என்ன இந்த காரில் இருக்கிறது என்றால் இந்த கார் முன்பக்கம் மற்றும் பின் பக்கம் என இரு பக்கங்களிலும் தனித்தனியாக எலெக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் பயனார் கார்கள் டர்போ வகைகளுடன் கிடக்கிறது.