தமிழ் சினிமாவின் இசை புயலாக கருதப்படும் இசையமைப்பாளர் ஏ .ஆர் .ரஹ்மான் தன்னுடைய இளைய மகள் ரஹீமா ரஹ்மானின் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட புகைப்படம் இப்போது வைரலாகி வருகிறது. ஏ. ஆர். ரஹ்மானின் உண்மையான பெயர் திலீப் குமார். தன்னுடைய 23 வது வயதில், மதகுரு காத்ரி இஸ்லாமின் வழிகாட்டுதலோடு இஸ்லாம் மதத்தை தழுவிய ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறுவயதில் இருந்தே இசையில் அதிக ஆர்வம் உண்டாம்.
அதனைத் தொடர்ந்து ஏ.ஆர் ரஹ்மான் தனது சிறு வயதில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘வொண்டர் பலூன்’ என்ற நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் நான்கு கீ போர்ட்கள் வாசித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். கம்ப்யூட்டர் இன்ஜினியராக வேண்டும் என்று சிறு வயதில் இருந்தே கனவு கொண்டிருந்த ஏ.ஆர்.ரஹ்மான், இசை மீது இருந்த ஈடுபாட்டால் தனது 15 வயதிலேயே பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டு பல இசைக் கச்சேரிகளில் கலந்துகொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்தாராம்.
ஏ ஆர் ரஹ்மானின் இசைப்பயணம்:
பின்பு பல விளம்பர படங்களுக்கு இசையமைத்து வந்த ஏ.ஆர்.ரஹ்மான் ,முதல் முதலாக இசையமைத்தது மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘யோதா’ என்ற திரைப்படம் தான். ஆனால் அந்தப் படம் வெளியாவதற்கு முன்பே தமிழில் “ரோஜா” படம் வெளியானதால் ரோஜா படமே ரஹ்மானின் முதல் படமாக மாறியது. தான் இசையமைத்த முதல் படத்திலேயே அனைத்து பாடல்களும் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் ஆனதை தொடர்ந்து ,கோலிவுட்டில் இளையராஜாவுக்கு இணையாக ரஹ்மானும் கொண்டாடப்பட்டார்.
ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர். ரஹ்மான்:
தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற பிறமொழி படங்களுக்கும் இசையமைத்து வந்த ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கடந்த 2008 ஆம் ஆண்டு வெளிவந்த “ஸ்லம்டாக் மில்லியனர்” படத்திற்கு இசையமைத்ததற்காக இரண்டு “ஆஸ்கார் விருதுகள்” கிடைத்தது நாம் அறிந்தவையே. இதன் மூலம் பெருமைக்குரிய ‘ஆஸ்கார் விருது வென்ற முதல் இந்தியர்’ என்கிற சாதனையை படைத்த ஏ.ஆர்.ரஹ்மான், சினிமாவில் அறிமுகமாகி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் இன்றும் பிசியான இசையமைப்பாளராக வலம் வருகிறார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் குடும்பம்:
கடந்த 1995 ஆம் ஆண்டு இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் ஷெரினா பானு என்பவரை செய்து கொண்டார். இவர்களுக்கு கதீஜா ,ரஹீமா என்ற மகள்களும், ஏ.ஆர்.அமீன் என்கிற மகனும் உள்ளனர். மேலும் ஹலிதா ஹமீம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மின்மினி’ என்கிற திரைப்படத்தில் ஏ.ஆர். ரஹ்மானின் மூத்த மகள் கதீஜா இசையமைப்பாளராக அறிமுகமாக இருக்கிறார். அதேபோல் ஏ .ஆர்.அமீனும் சனிமாவில் பல்வேறு ஹிட் பாடல்களை பாடி கலக்கி வருகிறார்.
ரஹ்மானின் இளைய மகள் பட்டமளிப்பு விழா:
மேலும் இவர்களில் சினிமா பக்கமே தலை காட்டாமல் இருந்த ஏ.ஆர்.ரஹ்மானின் இளைய மகள் ரஹீமா தற்போது படித்து பட்டம் பெற்றபோது எடுத்த புகைப்படம் வெளியாகி உள்ளது. அதன்படி ஏ.ஆர்.ரகுமான் துபாயில் கேட்டரிங் படிப்பை முடித்துள்ள ரஹீமாவின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, அவருக்கு பட்டத்தை வழங்கிய புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்ததோடு ‘ஒரு தந்தையாக ரொம்ப பெருமையாக இருக்கிறது’ என்று நெகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ளார்.