இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் மகளுக்கு திருமணம் – மாப்பிளை யார் தெரியுமா ? இதோ விவரம்.

0
1016
arrahman
- Advertisement -

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் மகளுக்கு மிகவும் சிம்பிளாக திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கிறது. இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கினார். பின் ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழி படங்களுக்கும் இசையமைத்து உள்ளார். மேலும், இரண்டு ஆஸ்கர் விருதை குவித்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தவர்.

-விளம்பரம்-
ஏ ஆர் ரஹ்மான் மகன் மற்றும் மகள்கள்

மூத்த மகளுக்கு விரைவில் திருமணம் :

ஏ ஆர் ரஹ்மான் கடந்த 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்துகொண்டார். அமீன் என்ற மகனும், கதீஜா ரகுமான், ரெஹிமா ரகுமான் என்ற இரு மகள்களும் உள்ளனர். இப்படி ஒரு நிலையில் ஏ ஆர் ரஹ்மானின் முதல் மகள் கதீஜாவிற்கு  கடந்த 22ம் தேதி எளிய முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். மணமகன் பெயர் ரியாஸ் . திருமண தேதியை இன்னும் அறிவிக்கவில்லை.

- Advertisement -

மகள் கதீஜா சந்தித்த சர்ச்சை :

பெரும்பாலும் ஏர் ஆர் ரஹ்மான் ஏ ஆர் ரஹ்மான் தன் பிள்ளைகளைமீடியா கண்களுக்கு காட்டுவது இல்லை. இருப்பினும் இவரது மகள் கதீஜா கடந்த 2020 அம ஆண்டு சமூக வலைதளத்தில் பேசு பொருளாக இருந்தார். ஏ ஆர் ரஹ்மானின் இரண்டு மகள்களில் கதீஜா, தன் தந்தையை போல இஸ்லாம் மதத்தை கடுமையாக கட்டிப்பிடித்து வருபவர். மேலும், இவர் எங்கு சென்றாலும் புர்கா அணியாமல் சென்றது இல்லை.

AR Rahman's daughter Khatija's animated music video wins global award
ஏ ஆர் மகன் கதீஜா

கதீஜா சந்தித்த புர்கா பிரச்சனை :

அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஏ ஆர் ரஹ்மான், ஆஸ்கர் வென்று 10 ஆண்டுகள் நிறைவு செய்ததை கொண்டாடும் வகையில் மும்பையில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது ஏ ஆர் ரஹ்மானின் மகள் கதீஜா மேடையில் புர்காவை கழட்டாமல் பேசி இருந்தார். இதனால் ஏ ஆர் ரஹ்மான் மிகவும் பிற்போக்குவாதியாக நடந்து கொண்டவர் என்ற விமர்சனங்கள் கூட எழுந்தது.

-விளம்பரம்-

கதீஜா கொடுத்த பதிலடி :

இதற்கு பதிலடி கொடுத்த கதீஜா , என் பெற்றோர்கள் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து இருக்கிறார்கள். நான் என்ன ஆடை அணிய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் என்று நெத்தியடி பதிலை கொடுத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் நடிகர் ரகுமானின் மகளுக்கு திருமணம் நடைபெற்றது.

நடிகர் ரகுமான் மகள் திருமணம்

நடிகர் ரகுமான் மகளின் திருமணம் :

நடிகர் ரகுமான் திருமணம் செய்துகொண்டுள்ள மெஹர் வேறு யாரும் இல்லை. ஏ ஆர் ரஹ்மான் மனைவி சாய்ரா பானுவின் சகோதரி தான். ரகுமானின் மூத்த மகளான ருஸ்தாவுக்கும், அல்தாஃப் நவாப் என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.இதில் தமிழக முதலவர் M.K.ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement