90 ஏக்கர் சொந்த நிலம், கண்டைனர் மூலம் செட், டெக்னிஷின்களுக்கு விருந்து – படு கோலாகாலமாக நடைபெற்றுள்ள ரகுமான் மகளின் திருமணம்.

0
535
arrahman
- Advertisement -

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானின் மகளுக்கு மிகவும் ப்ரம்மாண்டமாக திருமணம் நடைபெற்று இருக்கிறது. தற்போது ஏ ஆர் ரஹ்மானின் வருங்கால மருமகன் குறித்த தகவல் நமக்கு கிடைக்கப்பெற்று இருக்கிறது. இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கினார். பின் ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழி படங்களுக்கும் இசையமைத்து உள்ளார்.

-விளம்பரம்-

மேலும், இரண்டு ஆஸ்கர் விருதை குவித்து தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்தவர். ஏ ஆர் ரஹ்மான் கடந்த 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்துகொண்டார். அமீன் என்ற மகனும், கதீஜா ரகுமான், ரெஹிமா ரகுமான் என்ற இரு மகள்களும் உள்ளனர். இப்படி ஒரு நிலையில் ஏ ஆர் ரஹ்மானின் முதல் மகள் கதீஜாவிற்கு  கடந்த 22ம் தேதி எளிய முறையில் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

- Advertisement -

ஏ ஆர் ரஹ்மானின் மருமகன் :

பொதுவாக ஏ ஆர் ரஹ்மான் மிகவும் எளிமையான நபர். இதனால் தனது மகளின் நித்தியதார்தத்தை கூட மிகவும் எளிமையாகவே நடத்தி இருந்தார். இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர். கதீஜாவை திருமணம் செய்துகொள்ளப்போகும் மணமகன் பெயர் ரியாஸ் என்ற தகவல் மட்டுமே வெளியானது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் கதீஜாவின் திருமணம் படு ரகசியமாக நடைபெற்றது.

ரகுமானின் 90 ஏக்கர் நிலம் :

நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த திருமணத்தில் மறைந்த தன் அம்மாவின் புகைப்படத்திற்கு முன் நிக்க செய்து வைத்துள்ளார் ரகுமான். ரகுமான் மகளின் திருமணம் படு சிம்பிளாக நடைபெற்றது என்று கூறப்பட்டது. ஆனால், உண்மையில் சோழா ஹோட்டலில் தான் திருமணம் நடைபெற்று இருக்கிறது. மேலும், சென்னை ரெட் ஹில்ஸ் சாலையில் கவரப்பேட்டை பகுதியில் ரகுமானுக்கு சொந்தமான 90 ஏக்கரர் நிலம் இருக்கிறது.

-விளம்பரம்-

கண்டைனர் மூலம் செட் :

அங்கு தான் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு திருமண வரவெற்பு நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது. மேலும், நுழைவு வாயிலில் கண்டைனர் மூலம் படு பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பெரும்பாலும் ரகுமானிடம் பணிபுரியும் டெக்னிஷியன்கள் தான் பங்கேற்று இருந்தனர்.கதீஜாவை திருமணம் செய்துகொள்ளப்போகும் மணமகன் ரியாஸ் ஒரு சவுண்ட் இன்ஜினியர். இவர் பல்வேறு ஸ்டூடியோகளிலன் சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.

யார் இந்த ரியாஸ் :

அவ்வளவு ஏன் இவர் ஏ ஆர் ரஹ்மானின் படத்திலும் சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம், இவர் ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்த ‘தாமாஷா’ என்ற பாலிவுட் படத்தில் பணியாற்றி இருக்கிறார். ரன்பீர் கபூர், தீபிகா படுகோன் நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில் ரியாஸ் பணியாற்றி இருக்கிறார். அதுபோக இவரது பெயரை படத்தின் டைட்டில் கார்டிலும் ஏ ஆர் ரஹ்மான் சவுண்ட் இன்ஜினியர்கள் பெயரில் குறிப்பிட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement