அம்மாவிற்கு இறந்த பின் கல்லறை கட்டிய ரஹ்மான் – ஆனால், அவர் பரிசியாக கொடுத்த முதல் காரை எப்படி வைத்துள்ளார் பாருங்க.

0
810
arr
- Advertisement -

இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளராக திகழ்பவர் ஏ. ஆர். ரகுமான். இவர் சிறுவயதில் தூர்தர்ஷன் சேனலில் ஒளிபரப்பான `வொன்டர் பலூன்’ என்ற நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் 4 கீ போர்டுகளை வாசித்துப் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில்பிரபலமாகி இருந்தார். உண்மையிலேயே சொல்லவேண்டுமென்றால் ஏ ஆர் ரஹ்மானுக்கு கம்ப்யூட்டர் இன்ஜினியராக வேண்டும் என்பது தான் சிறு வயது கனவாம். ஆனால், இவர் இசையின் மீது இருந்த ஈடுபாடு காரணமாக தனது 15 வயதிலேயே பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டார்.

-விளம்பரம்-

பின்னர் பல இசைக் கச்சேரிகளில் கலந்து கொண்டு தன்னுடைய தனித்துவத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
மேலும், இவர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடங்கி இருந்தார். தனது முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார். அதோடு, ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக அறிமுகமானது ரோஜா படம் என்றாலும் அதற்கு முன்பாக இளையராஜா, டி ராஜேந்தர் என்று பல்வேறு இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ரகுமான் திரைப்பயணம்:

பின் இவர் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். மேலும், இரண்டு ஆஸ்கர் விருதை வென்ற முதல் இந்தியர் ஆஸ்கர் பெருமையையும் பெற்றவர். தற்போது உலக அளவில் புகழ்பெற்ற இசை அமைப்பாளராக ஏ ஆர் ரகுமான் திகழ்ந்து கொண்டிருக்கிறார். அதோடு ஏ ஆர் ரஹ்மான் அந்த காலத்திலேயே நவீன இசை கருவிகளை பயன்படுத்தி இளசுகளை தன் பக்கம் ஈர்த்தார். தற்போது இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் கமிட்டாகி பிசியாக இருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, ஏ ஆர் ரஹ்மான் பிறப்பால் ஒரு இந்து.

ரகுமான் அம்மா மரணம்:

ஆனால், 20 வயதில் தன் தந்தையின் இறப்பிற்கு பின்னர் முஸ்லிமாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இவர் சிறு வயதிலேயே தந்தையை இழந்தாலும் தாயின் வளர்ப்பில் தான் வளர்ந்தார். அதனால் தான் இவர் தன் தாய் மீது அதிக அன்பும் அக்கறையும் கொண்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் ஏ ஆர் ரஹ்மானின் தாயார் கடந்த ஆண்டுக்கு முன் டிசம்பர் 28 ஆம் தேதி வயது மூப்பு காரமான காலமானார். சில மாதங்களுக்கு முன்பு தான் ஏ.ஆர். ரகுமான் தன் தாயின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் இசையமைத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் தன் தாய்க்கு மிக பெரிய கல்லறையையும் கட்டி இருக்கிறார்.

-விளம்பரம்-

ஏ.ஆர்.ரகுமான் அம்மா வாங்கி தந்த கார்:

இது குறித்த புகைப்படம் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. பலரும் ஏ ஆர் ரஹ்மானை பாராட்டி இருந்தார்கள். இந்நிலையில் ஏ ஆர் ரகுமான் குறித்த தகவல் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், சில வருடங்களுக்கு முன்பு ஏ ஆர் ரகுமான் அவர்கள் தன்னுடைய அம்மா தனக்கு முதன் முதலாக வாங்கி தந்த காரின் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டிருந்தார். அது மிகவும் பழமையாக, எந்த ஒரு வேலையும் செய்யாமல் முடக்கில் போடப்பட்டது போல் இருந்தது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் ஏன் இப்படி வைத்திருக்கிறீர்கள்?

காரின் நிலைமை:

உங்கள் அம்மாவின் நினைவாக இப்படி வைத்திருப்பதா? என்று கேள்வி எல்லாம் எழுப்பி இருந்தார்கள். அதன் பிறகு ஏ.ஆர்.ரகுமான் காரை சரி செய்து இருப்பார் என்று நினைத்தார்கள். ஆனால், தற்போதும் அந்த கார் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே வைத்திருக்கிறார். அம்மாவிற்காக மணி மண்டபம் கட்டிய ரகுமான் அம்மா தந்த காரை மட்டும் இப்படி வைத்திருப்பது குறித்து பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஒருவேளை இந்த காரை அம்மாவின் சமாதியின் பக்கத்தில் வைப்பாரா? இல்லை வேறு ஏதோ காரணத்திற்காக அப்படியே வைத்திருக்கிறாரா என்பது தெரியவில்லை.

Advertisement