ஏ.ஆர்.ரஹ்மான் தன் இசைப் படைப்புகளுக்கு சேவை வரி கட்டணம் செலுத்த வேண்டுமா, கூடாதா?

0
475
- Advertisement -

இந்திய அளவில் புகழ் பெற்ற திரைப்பட இசையமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான். இவர் சிறுவயதிலிருந்தே இசையில் அதிக ஆர்வம் உடையவர். இதனால் பல கச்சேரிகளில் பாடி இருக்கிறது. பின் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் தான் தனது இசை பயணத்தை தொடதொடங்கினார் ரகுமான் . தனது முதல் படத்திலேயே தேசிய விருதையும் பெற்றார். மேலும் இவர் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு பல சூப்பர் ஹிட் பாடல்கள் இசையமைத்து கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

-விளம்பரம்-

ஆஸ்கார் நாயகன் :

மேற்கத்திய இசையை பாமர மக்களுக்கு கொண்டு சென்றவர். தன்னுடைய துள்ளல் இசையால் இளைஞர்களை கவர்ந்தவர். மேலும், அமைதியான சுபாவம் கொண்ட ஏ ஆர் ரகுமான் தன்னுடைய இசையால் அனைவரையும் பேச வைத்தார். மேலும், இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் தமிழ் மீது தீராத காதல், அன்பும் கொண்டவர். சர்வதேச அளவில் திரைத் துறையினருக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஆஸ்கர் விருதை அதுவும் இரண்டு விருதுகளை வென்று உலக அரங்கில் தமிழை தலைநிமிரச் செய்தவர் ஏ.ஆர். ரகுமான். இப்படி குறுகிய காலத்திலேயே பாலிவுட், ஹாலிவுட் என எல்லா மொழி படங்களிலும் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார் ரகுமான்.

- Advertisement -

ஏ ஆர் ரகுமான் தொடர்ந்த வழக்கு :

இந்நிலையில் ஏ ஆர் ரகுமான் அவருடைய பாடல்களுக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு 6.76 கோடி ரூபாயை சேவை வாரியாக செலுத்த வேண்டும் என்ற உத்தரவு பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த உத்தரவை ஏ ஆர் ரகுமான் மறுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கில் அவர் கூறியதாவது “பதிப்புரிமை சட்டத்தின்படி இசைய அமைக்கும் இசையமைப்பாளரே அதன் உரிமையாளர்கள். அதுவே அந்த படைப்பை திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு விற்றால் அவர்கள்தான் அந்த பாடலின் உரிமையாளர்.

தள்ளுபடி செய்த நீதி மற்றம் :

எனவே இப்படி தன் படைப்பை மற்ற ஒருவருக்கு கொடுத்து விட்ட பின்னர் தன்னிடமே அந்த படைப்பிற்கு வரி வசூலிப்பது சட்டப்படி குற்றமாகும் என்றும், இது தன்னுடைய புகழுக்கு களங்கம் உருவாகும் வகையில் இருக்கிறது என்று கூறியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கை தள்ளுபடி செய்தும், இந்த வழக்கு தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளை சந்திக்கும் படியும் கூறினர். மேலும் ஜி வி பிரகாஷ் அவர்களும் தன் மீது வைக்கப்பட்ட 1.8 கோடி ரூபாய் வரியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கும் தள்ளிப்படி செய்யப்பட்டது.

-விளம்பரம்-

சேவை வரி கட்ட வேண்டுமா? :

இது தொடர்பாக தொழில்முனைவோர் ஒருவர் கூறுகையில் சேவை வரி என்பது வழக்கறினார்களை தவிர மற்ற அனைவருக்கும் செல்லுபடியாகும். சேவை வரி என்பது ஒரு தயாரிப்பு அல்லது சேவையை விற்று அதன் மூலம் பணம் பெறுகிறோம் என்றால் அதற்கு சேவை வரி கண்டிப்பாக கட்ட வேண்டும். தயாரிப்பாளரிடம் இசையமைப்பாளர் ஒருவர் இசையை அமைத்து பதிப்புரிமையை அவரிடம் கொடுத்தால் கூட அது ஒரு சேவை தான் எனவே சேவை வரி இசையமைப்பாளர்களுக்கு செல்லுபடியாகும் என்று கூறினார்.

Advertisement